Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 Schedule - மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் போட்டிகள்.. சிஎஸ்கே உடன் இரு முறை மோதல் விவரம்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே உடன் இரண்டு முறை மோதும் வகையில் போட்டியின் அட்டவணை அமைக்கப்பட்டு இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் வெறும் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அட்டவணை வெளியான பிறகு அதற்கு ஏற்ற வகையில் எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணையை தயாரித்து தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

IPL 2024 schedule - Mumbai indians home and away match and time table details

அதன்படி மும்பை அணி குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்திருக்கிறது. மும்பை அணி நடப்பு சீசனில் சிஎஸ்கே சன்ரைசர்ஸ் ஆர்சிபி பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய அணிகளை இரண்டு முறையும் கேகேஆர், ராஜஸ்தான், டெல்லி லக்னோ ஆகிய அணிகளை ஒரு முறையும் எதிர்கொள்ள உள்ளது. தற்போது மும்பை அணி விளையாட போகும் அட்டவணையை தற்போது பார்க்கலாம்.

மும்பை அணி தன்னுடைய இரண்டாவது போட்டியை மார்ச் 27ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை, அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதி வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்ளும் மும்பை அணி, ஏப்ரல் ஏழாம் தேதி டெல்லியை தங்களது சொந்த மண்ணில் சந்திக்கிறது.

அதன் பிறகு ஏப்ரல் பதினோராம் தேதி மீண்டும் மும்பையில் ஆர்சிபிஐ எதிர்கொள்ளும் மும்பை இந்தியன்ஸ் அணி, ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சிஎஸ்கே அணியை ஏப்ரல் 14ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் சந்திக்கிறது. ஏப்ரல் 18ஆம் தேதி மொகாலியில் பஞ்சாப்பை எதிர்கொள்ளும் மும்பை அணி, ஏப்ரல் 22ஆம் தேதி ராஜஸ்தானை ஜெய்ப்பூரில் எதிர்கொள்கிறது.

ஏப்ரல் 27 ஆம் தேதி டெல்லியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் மும்பை இந்தியன்ஸ் அணி, ஏப்ரல் 30ஆம் தேதி லக்னோவுடன் பல பரிட்சை நடத்துகிறது. மீண்டும் மே மூன்றாம் தேதி மும்பையில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணி கேகேஆர்ஐ எதிர் கொள்கிறது. இரண்டு நாள் இடைவெளி விட்டு மே 6ஆம் தேதி ஹைதராபாத்தை மீண்டும் தங்களது சொந்த மண்ணில் மும்பை எதிர்கொள்கிறது. இதனை அடுத்து மே 11ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கேகேஆர் அணியையும் மே 17ஆம் தேதி லக்னோ அணியை தங்களது சொந்த மண்ணிலும் எதிர்கொள்கிறது.

Story first published: Monday, March 25, 2024, 18:08 [IST]
Other articles published on Mar 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+