Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி, ரோகித் சாதனையை சமன் செய்த ஸ்ரேயாஸ்.. ஐபிஎல் தொடரில் கேப்டனாக மாஸ் ரெக்கார்ட்

கொல்கத்தா : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடரில் அனுபவ கேப்டன்களான தோனி, ரோகித் சர்மா ஆகியோர் யாருமே இடம் பெறாத நிலையில் அனுபவம் வாய்ந்த கேப்டன் என்ற பெயரை ஸ்ரேயாஸ் மட்டும்தான் பெற்று இருந்தார்.

டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ், தன்னுடைய பயணத்தை ஐபிஎல் தொடரில் தொடங்கினாலும் பிறகு கொல்கத்தா அணிக்கு மாறினார். இந்த நிலையில் கௌதம் கம்பீரின் துணையோடு ஸ்ரேயாஸ் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

IPL 2024 - Shreyas iyer equals Legendary MS Dhoni and Rohit sharma captaincy

கே கே ஆர் அணியின் வெற்றிக்கு ஸ்ரேயாஸ் கேப்டன்சி தான் காரணம் என்று கிரிக்கெட் வல்லுனர்களும் பாராட்டு வருகின்றனர். நடப்பு சீசனில் லீக் சுற்றி 9 வெற்றி, ஐபிஎல் வரலாற்றிலே அதிக ரன் ரேட் வைத்திருந்த அணி,புள்ளி பட்டியலில் முதல் முறையாக முதல் இடம், குவாலிபயர் ஒன்று போட்டியில் 24 பந்துகளில் 58 ரன்கள் என ஸ்ரேயாஸ் ஐயர் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

பவுலர்களை சுழற்சி முறையில் மாற்றும் விதம், பேட்ஸ்மேன்களை மாற்றும் விதம், அணி தேர்வு பில்டிங் செட்டப் என அனைத்திலுமே ஸ்ரேயாஸ் ஐயர் பணி சிறப்பாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரு மகத்தான சாதனையை படைத்திருக்கிறார். அதாவது ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் அதிக அரை சதம் அடித்த கேப்டன்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

இதுவரை தோனி, ரோகித் சர்மா டேவிட் வார்னர் என்ற ஜாம்பவான் கேப்டன்கள் இதுவரை இரண்டு முறை அரைசதம் அடித்துள்ள நிலையில் ஸ்ரேயாஸ் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறார். இதைப்போன்று ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் அதிக முறை தகுதி பெற்ற அணி பட்டியலில் கே கே ஆர் அணி மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது.

இதுவரை சிஎஸ்கே பத்து முறையும், மும்பை ஆறுமுறையும், கே கே ஆர் 4 முறையும், ஆர்சிபி மூன்று முறையும் இறுதி போட்டிக்கு வந்திருக்கிறது. மேலும் பிளே ஆப் போட்டிகளில் கே கே ஆர் அணிக்காக அதிக பார்ட்னர்ஷிப் வைத்தவர்கள் பட்டியலில் தற்போது ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் ஐயரும் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்கள். இருவரும் 97 ரன்கள் இன்றைய ஆட்டத்தில் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, May 21, 2024, 23:54 [IST]
Other articles published on May 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+