ஐபிஎல் வரலாற்றில் ஸ்ரேயாஸ் மாபெரும் சாதனை..ரோகித் சர்மாவின் ரெக்கார்ட் சமன்! அடுத்த கேப்டனா ஸ்ரேயாஸ்?
மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியிருக்கிறது. இதன் மூலம் ஐபிஎல் தொடரை வென்ற கேப்டன் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றிருக்கிறார். இந்த தொடர் முழுவதும் கேகேஆர் அணி அபாரமாக விளையாடி 20 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்தது.
அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன் ரேட் உடன் லீக் சுற்றை முடிவு செய்த அணி என்ற பெருமையும் கே கே ஆர் அணி படைத்தது. இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை 113 ரன்களில் சுருட்டிய கே கே ஆர் அணி அதனை 10.3 ஓவர்களில் எல்லாம் எட்டி அசத்தியது.

இதன் மூலம் 29 வயதான ஸ்ரேயாஸ், ரோகித் சர்மாவின் ஒரு மாபெரும் சாதனையை சமன் செய்திருக்கிறார். அதாவது ரோகித் சர்மா 2009 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜஸ் அணிக்காக விளையாடிய போது வளர்ந்து வரும் வீரருக்கான விருதை அப்போது வென்றார். அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஐபிஎல் கோப்பை வென்றதன் மூலம் வளர்ந்து வரும் வீரர் மற்றும் ஐபிஎல் கோப்பை வென்ற ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்தார்.
தற்போது இந்த சாதனையை தான் ஸ்ரேயாஸ் சமன் செய்திருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் 2015 ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக அறிமுகமானார். அந்த சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் 14 போட்டிகளில் விளையாடி 439 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வளர்ந்து வரும் வீரர்களுக்கான விருது அப்போது கிடைக்கப்பெற்றது.
அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு சீசன் நடுவில் கௌதம் கம்பீர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் ஸ்ரேயாஸ் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
ஐபிஎல் 2020 ஆம் ஆண்டு டெல்லி அணி இறுதிப்போட்டி வரை ஸ்ரேயாஸ் தலைமையில் வந்து தோற்றுது.
எனினும் அடுத்த நான்கு ஆண்டுகளில் கே கே ஆர் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறார். இதன் மூலம் ரோகித் சர்மாவுக்கு பிறகு வளர்ந்து வரும் வீரர் மற்றும் ஐபிஎல் கோப்பை வென்ற வீர என்ற சாதனையும் ஸ்ரேயாஸ் ஐயர் படைத்தார்.


Click it and Unblock the Notifications