Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்போ ஜெய்ஷா முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பார்! சொல்லி அடித்த கில்லி ஸ்ரேயாஸ் ஐயர்

சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தென்றதன் மூலம் ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றிருக்கிறார். இதன் மூலம் தோனி ரோகித் சர்மா கம்பீர் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு பிறகு ஐபிஎல் கோப்பையை வென்ற ஐந்தாவது இந்திய கேப்டன் என்ற பெயரும் தற்போது ஸ்ரேயாஸ்க்கு கிடைத்திருக்கிறது.

இதன் மூலம் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு எல்லாம் தன்னுடைய கேப்டன்சியால் ஸ்ரேயாஸ் பதிலடி கொடுத்திருக்கிறார். நடப்பு சீசனில் ஸ்ரேயாஸ் 14 போட்டிகளில் விளையாடி 351 ரன்கள் பேட்டிங்கில் அடித்து இருக்கிறார்.

IPL 2024 - Shreyas iyer pays back bcci by winning the ipl cup after contract snubs

இதில் இரண்டு அரை சதங்கள் அடங்கும். ஸ்ரேயாஸ் ஐயரின் ஸ்ட்ரைக் ரேட் 146 என்ற அளவில் இருக்கிறது. பேட்டிங்கில் மட்டுமல்லாமல் கேப்டன்ஷியில் ஸ்ரேயாஸ் முதிர்ச்சியுடன் நடந்து கொண்டிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்களும் பாராட்டியுள்ளனர்.
இந்த சூழலில் தான் காயம் காரணமாக ரஞ்சி போட்டியில் விளையாடாத ஸ்ரேயாஸ்க்கு பிசிசிஐ ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது.

இதற்கு ஸ்ரேயாஸ், உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்ற பிறகு பிரதமர் மோடியை சந்தித்த சூழலில் ஸ்ரேயாஸ் மரியாதை குறைவாக நடந்து கொண்டதால்தான் இந்த தண்டனை வழங்கப்பட்டதாக அப்போதே பலரும் கூறினர்.இந்த சம்பவத்திற்கு பிறகு ஸ்ரேயாஸ் மனம் உடைந்து போனாலும் தன்னுடைய உழைப்பை அவர் கைவிடவே இல்லை.

தம்மை அவமானப்படுத்தியவர்கள் முன்பு ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற வெறியில் இருந்த ஸ்ரேயாஸ் தற்போது ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.பிசிசிஐயின் விலை மதிப்பற்ற வைரமாக ஐபிஎல் தொடர் விளங்கி வருகிறது. இந்த நிலையில் அந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியாவுக்கு இந்திய டி20 அணியின் கேப்டன் பதவி கொடுத்து பிசிசிஐ அழகு பார்த்தது.

தற்போது அதே பாணியில் ஸ்ரேயாஸ் ஐயரும் சாதனை படைத்திருக்கிறார். இதனால் ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரை மீண்டும் சேர்க்குன் அளவிற்கு தற்போது பிசிசிஐ தள்ளப்பட்டு இருக்கிறது. ஜெய்ஷா, ஸ்ரேயாஸ் விஷயத்தில் அவசரப்பட்டு நடந்து கொண்டதாகவும், தற்போது அவர் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார் என்றும் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Story first published: Monday, May 27, 2024, 7:30 [IST]
Other articles published on May 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+