Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ

அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய போட்டியின் போது சுப்மன் கில் வெளிநாட்டு ரசிகை ஒருவரை திரையில் பார்த்து வாயை பிளந்ததாகக் கூறி ஒரு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் மோதிய போட்டி கடந்த ஏப்ரல் 17 அன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 89 ரன்கள் மட்டுமே எடுத்தது. சுப்மன் கில் அந்தப் போட்டியில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் மற்ற பேட்ஸ்மேன்களின் பேட்டிங்கை அவர் பார்த்துக் கொண்டு இருந்த போது மைதானத்தில் இருந்த பெரிய திரையில் ஒரு வெளிநாட்டு ரசிகையை மீண்டும், மீண்டும் காட்டினார் கேமரா மேன்.

IPL 2024 Shubman Gill looking at a fan girl in big screen

அப்போது சுப்மன் கில் திரையைப் பார்த்து வாயை பிளந்து சிரிப்பது போன்ற காட்சிகளும் அடுத்து திரையில் காண்பிக்கப்பட்டது. இந்த வீடியோவை மட்டும் எடுத்து சில ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதன் கீழ் பலரும் வேடிக்கையான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

சிலர் குஜராத் டைட்டன்ஸ் அணி மோசமாக விக்கெட்டுகளை இழந்த நிலையில் போட்டியை பார்ப்பதை விட அந்த ரசிகையை பார்க்கலாம் என சுப்மன் கில் முடிவு செய்து விட்டார் என அந்த அணியை கிண்டல் செய்து இருந்தனர்.

மேலும், சிலர் சுப்மன் கில், சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரை காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த காட்சியை சாரா பார்த்து விட்டதால் இருவருக்கும் பிரேக் அப் ஆகப் போகிறது என கேலி செய்தும் வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் வேகமாக விக்கெட்டுகள் சரிந்து சுவாரசியமின்றி இருக்கும் போது இது போல அழகான ரசிகைகளை திரையில் காட்டி சமூக வலைதளங்களில் ஒரு வித பரபரப்பை ஏற்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரில் இது போல சில ரசிகைகளை திரையில் காட்டுவதும், அந்த பெண் யார் என இளம் ரசிகர்கள் தேடத் துவங்குவதும் வாடிக்கையாக உள்ளது.

Story first published: Friday, April 19, 2024, 15:30 [IST]
Other articles published on Apr 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+