Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை எல்லாம் புத்திசாலித்தனத்தால் வீழ்த்தவே முடியாது.. சரண்டர் ஆன SRH கேப்டன் பாட் கம்மின்ஸ்

மும்பை : சர்வதேச கிரிக்கெட் உலகில் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் பாட் கம்மின்ஸ் தான் பெஸ்ட் கேப்டன் என்ற பெயரை பெற்றிருக்கிறார். ஐசிசி உலக கோப்பை ,ஆஷஸ் தொடர், ஐ சி சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் என அனைத்தையும் ஆஸ்திரேலிய அணிக்காக பாட் கம்மின்ஸ் வென்று கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் உலகின் சிறந்த கேப்டன் என்று அறியப்படும் பாட் கம்மின்ஸ், தோனியை பற்றி பாராட்டி பேசி இருப்பது தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியின் போது இந்திய ரசிகர்களை சத்தத்தை அமைதிப்படுத்துவேன் என்று அவர் கூறியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

IPL 2024 - SRH captain Pat cummins says He wont even to try outsmart MS Dhoni

ஆனால் தற்போது ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரில் களமிறங்கும் பாட் கம்மின்ஸ், சிஎஸ்கே எதிரான போட்டி குறித்து பேசி இருப்பதை தற்போது பார்க்கலாம். என்னுடைய பணி கேப்டனாக வீரர்களிடமிருந்து சிறந்த செயல்பாட்டை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பது மட்டும்தான். எதிரணி பலம் என பலவீனம் என்ன என்பது குறித்து அலசுவது முக்கியமாக இருந்தாலும் தோனி போன்ற ஜாம்பவான்களை புத்திசாலித்தனத்தால் வீழ்த்தவே முடியாது.

அதற்கு நான் முயற்சி கூட செய்ய மாட்டேன் என்று பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார். இதை தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் எந்த அணிக்காக விளையாடுவதாக இருந்தாலும், கேப்டனாக இருந்தாலும் இல்லை சாதாரண வீரராக இருந்தாலும், உங்கள் மீது எப்போதுமே எதிர்பார்ப்பு இருக்கும். இந்திய ரசிகர்கள் எவ்வளவு வெறித்தனமாக இருப்பார்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

இதனால் புதியதாக நாங்கள் எதுவும் செய்யப் போவதில்லை. நாங்கள் தொடர்ந்து கடும் முயற்சி செய்து வருகிறோம். எங்களுடைய சிறந்த செயல்பாட்டை களத்தில் வெளிப்படுத்துவோம். டி 20 கிரிக்கெட் என்பது நிச்சயம் கடினமான ஒரு கிரிக்கெட் ஆகும். இந்தத் தொடரில் உங்களுக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கும். மிகப்பெரிய தோல்விகளும் சந்திக்க நேரிடும். இந்தத் தொடர் இதற்கு விதிவிலக்கு கிடையாது. இந்த தொடரில் நாங்கள் கடும் முயற்சி செய்து ஐபிஎல் கோப்பையை வெல்ல முயற்சி செய்வோம் என்று பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

Story first published: Friday, April 5, 2024, 15:57 [IST]
Other articles published on Apr 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+