Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

20.50 கோடிக்கு ஆப்பு வைத்த ஐபிஎல் வீரர்.. காவ்யா மாறன் எடுத்த முடிவு தப்பாகிப் போச்சே

ஹைதராபாத் : 2024 ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனால் 20.50 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் படுமோசமாக பந்து வீசி ஏமாற்றம் அளித்து இருக்கிறார்.

இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இரண்டாவது அதிகபட்ச தொகையை சம்பளமாக பெற்றவர் பாட் கம்மின்ஸ் தான். இந்த நிலையில் அவர் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையான டி20 போட்டியில் அதிக ரன்களை வாரிக் கொடுத்து ஏமாற்றம் அளித்து இருக்கிறார். அந்த வகையில் காவ்யா மாறன் தவறான முடிவை எடுத்து விட்டதாக தற்போது ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

IPL 2024 : SRH fans not happy as Pat Cummins failed in NZ vs AUS T20

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் அனைத்து வீரர்களும் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதை அடுத்து நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 215 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தனர். அதில் வேகப் பந்துவீச்சாளர்களில் பாட் கம்மின்ஸ் அதிக ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். அவர் 4 ஓவர்களில் 43 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். பாட் கம்மின்ஸ் டி20 போட்டிகளில் சரியாக பந்து வீசுவதில்லை என்ற விமர்சனம் இருக்கும் நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது இந்த பந்துவீச்சு.

2024 ஐபிஎல் ஏலத்துக்கு முன்னதாக பாட் கம்மின்ஸ் 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரை கேப்டனாக ஆஸ்திரேலிய அணிக்கு பெற்றுக் கொடுத்து இருந்தார். அந்த சூழ்நிலையில் தான் காவ்யா மாறன், பாட் கம்மின்ஸ்-க்கு 20.50 கோடி கொடுக்க முன் வந்தார். அப்போதே பாட் கம்மின்ஸ் டி20 வீரர் அல்ல. அவர் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்ற ஆல் - ரவுண்டர். ஆனால், டி20 போட்டிகளில் அவர் செயல்பாடு சரியாக இருக்காது என்ற விமர்சனம் எழுந்தது.

இப்போது கூட ஆஸ்திரேலிய டி20 அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவர் தலைமையில் தான் ஆஸ்திரேலிய டி20 உலகக்கோப்பை தொடரில் களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய டி20 அணியிலேயே இரண்டாம் கட்ட வேகப் பந்துவீச்சாளராகத் தான் இடம் பெற்று இருக்கிறார். இந்த நிலையில், 20.50 கொடுத்து வாங்கப்பட்ட பாட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக செயல்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Wednesday, February 21, 2024, 20:26 [IST]
Other articles published on Feb 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+