Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே சோலியை முடிக்கப் பார்க்குறீங்களா? பொங்கி எழுந்த சிவம் துபே.. கதிகலங்கிய சன்ரைசர்ஸ்

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரன் குவிக்க தடுமாறியது. 2 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் களமிறங்கிய சிவம் துபே தனது அதிரடி ஆட்டத்தால் போட்டியை மாற்றினார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது சன்ரைசர்ஸ் அணி.

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துவக்கத்தில் ரன் குவிக்கத் திணறியது. துவக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 9 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே, கேப்டன் ருதுராஜ் இணைந்து நிதானமாக ரன் சேர்த்தனர்.

IPL 2024 SRH vs CSK Shivam Dube saved Chennai Super Kings against Sunrisers Hyderabad

ருதுராஜ் கெய்க்வாட் 21 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது போட்டி முழுவதும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வசம் இருந்தது. அந்த அணி
அடுத்து 7.1 ஓவரில் பேட்டிங் செய்ய வந்த சிவம் துபே தான் சந்தித்த மூன்றாவது பந்திலேயே சிக்ஸ் அடித்தார். தொடர்ந்து ரன் ரேட்டை உயர்த்த தனி ஆளாக போராடினார்.

ரஹானே பவுண்டரி அடிக்க முயற்சிக்காமல் நிதான ஆட்டம் ஆடினார். மறுபுறம் 4 சிக்ஸ், 2 ஃபோர் அடித்த சிவம் துபே 24 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பின் மீண்டும் போட்டி சன்ரைசர்ஸ் வசம் சென்றது. சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது.

சிவம் துபே மட்டும் அதிரடி ஆட்டம் ஆடி விரைவாக 45 ரன்கள் சேர்க்கவில்லை என்றால் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் இன்னும் மோசமாக இருந்திருக்கும்.

Story first published: Friday, April 5, 2024, 21:48 [IST]
Other articles published on Apr 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+