Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

களத்தில் தமிழில் பேசி விளையாடினேன்! இறுதி போட்டி தான் முக்கியம்.. கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் கருத்து

பெங்களூர் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு பிளே ஆப் சுற்றில் முதல் குவாலிபையர் போட்டியில் சன்ரைசஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் நான்காவது முறையாக இறுதிச்சுற்று கே கே ஆர் அணி தகுதி பெற்றிருக்கிறது.

இந்த போட்டியில் 160 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எதிர்கொண்டு விளையாடிய போது கேகேஆர் அணியில் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அபாரமாக விளையாடி அரை சதம் விளாசினர். இதனால் கே கே ஆர் அணி இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

IPL 2024 SRH vs KKR - Shreyas iyer revelas venkatesh iyer will speak with him in tamil

இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு பேசிய கேகேஆர் கேப்டன் ஸ்ரேயாஸ், இந்த வெற்றி எனக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியும் கொடுக்கின்றது. சரியான நேரத்தில் அனைவரும் நன்றாக விளையாடினார்கள். ஒருவருக்கும் கொடுக்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து செயல்பட்டார்கள். தொடர்ந்து விளையாடியதால் சரியான ஓய்வு என்பது இந்த தொடரில் மிகவும் முக்கியம்.

குறிப்பாக ஒவ்வொரு நகரத்திற்கும் மாறி மாறி நாடு முழுவதும் சென்றோம். இந்த வெற்றி சந்தோஷத்தை கொடுத்தாலும் இன்னும் இறுதிப் போட்டி இருக்கிறது. அதுதான் மிகவும் முக்கியம். தற்காலத்தில் முதலில் இருக்க வேண்டும். நமக்கு என்ன வாய்ப்பு கிடைக்கிறதோ அதனை சரியாக பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பவுலரும் இன்று சரியாக செயல்பட்டு எங்களுக்கு வெற்றியை தேடி தந்தார்கள்.

சன்ரைசர்ஸ் வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும் எங்களுடைய பவுலர்கள் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை எடுத்தார்கள். எங்கள் வீரர்களின் மனவலிமை அபாரமாக இருந்தது. இந்த தொடரில் யாரும் எந்த அணியும் சாதாரணமாக நினைத்து விட முடியாது. எங்கள் அணியில் நிர்வாகமும் மற்ற நிர்வாகிகளும் எங்களுக்கு உறுதுணையாக நின்றார்கள்.

குர்பாஸ் சரியான நேரத்தில் வந்து எங்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். எனக்கும் ஸ்ரேயாஸ்க்கும் உள்ள ஒரே வித்தியாசம் எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் வெங்கடேஷ் என்னிடம் தமிழில் தான் பேசுவார். அவர் பேசுவதை நான் புரிந்து கொள்வேன். பதிலுக்கு நான் ஹிந்தியில் பேசுவேன். இறுதிப்போட்டி எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம் என்று ஸ்ரேயாஸ் கூறினார்.

Story first published: Tuesday, May 21, 2024, 23:38 [IST]
Other articles published on May 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+