Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தப்பிய கம்பீர்.. சிக்கிக் கொண்ட கேஎல் ராகுல், லாங்கர்.. கேகேஆர் அணிக்கு மாறியதற்கு இதுதான் காரணமா!

ஐதராபாத் : லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமலே கவுதம் கம்பீர் கேகேஆர் அணிக்கு தாவியதாக ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. இதனால் லக்னோ அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த 2 சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ அணி, இம்முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

IPL 2024 SRH vs LSG Fans doubts Lucknow team owner Sanjiv Goenka angry is the reason for Gautam Gambhir Exit from LSG

அதுமட்டுமல்லாமல் லக்னோ அணியின் செயல்பாடுகளில் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு திருப்தியில்லை என்று தெரிய வந்துள்ளது. ஏனென்றால் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு பின் மைதானத்திற்கு வந்த சஞ்சீவ் கோயங்கா, நேரடியாக கேப்டன் கேஎல் ராகுலிடம் கோபத்தை வெளிப்படுத்தினார்.

கேஎல் ராகுல் முடிந்த அளவிற்கு நிதானமாக பதிலளிக்கும் சஞ்சீவ் கோயங்கா கொஞ்சம் கூட கோபத்தை கட்டுப்படுத்தவில்லை. கேஎல் ராகுல் மட்டுமல்லாமல் பயிற்சியாளர் ஜஸ்டிங் லாங்கரிடமும் வெடித்தார். இந்த வீடியோ நேரலையிலேயே ஒளிபரப்பப்பட, ரசிகர்கள் சஞ்சீவ் கோயங்காவை பொளந்து கட்டி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் கடந்த இரு சீசன்களாக லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் செயல்பட்டார். லக்னோ அணியில் கவுதம் கம்பீருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டும், திடீரென கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாரூக் கானை சந்தித்தார். அதன்பின் கேகேஆர் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் பணியாற்றி வருகிறார்.

இதனால் சஞ்சீவ் கோயங்காவின் டார்ச்சர் தாங்க முடியாமலேயே கவுதம் கம்பீர் 2 ஆண்டுகளில் லக்னோ அணியை விட்டு வெளியேறியதாக பேச்சுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே புனே அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய போது, தோனியின் பதவியையே காலி செய்தவர். இதனால் சஞ்சீவ் கோயங்காவின் கோபம் காரணமாகவே கவுதம் கம்பீர் கேகேஆர் அணிக்கு சென்றதாக பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, May 9, 2024, 8:45 [IST]
Other articles published on May 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+