மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் ஒட்டுமொத்த ரசிகர்களுமே ஒரு வீரரை விமர்சித்து நான்கு பக்கமும் அடித்தார்கள் என்றால் அது ஹர்திக் பாண்டியா தான். காரணம், குஜராத் அணியில் இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு தாவி கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவுக்கு ஆப்பு வைத்தார் என்பதால் தான் ரசிகர்கள் அவர் மீது கோபத்தில் இருந்தனர்.
செல்லும் இடமெல்லாம் அவருக்கு எதிராக எதிர்ப்பு குரல் கொடுத்ததால் ஹர்திக் பாண்டியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கேப்டன் பொறுப்பிலும் ஹர்திக் பாண்டியா பெரிய அளவில் சாதிக்கவில்லை. மும்பை அணியின் ஸ்டார் ஆல் ரவுண்டராக விளங்கிய ஹர்திக் பாண்டியா பேட்டிங்களும் குறிப்பிடும் அளவில் எதையும் சாதிக்கவில்லை.

இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா இடம்பெற வேண்டும் என்றால் அவருடைய பந்துவீச்சு திறமையை நிரூபிக்க வேண்டும் என தேர்வு குழு அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியானது. இதனை எடுத்து மீண்டும் பவுலிங் கவனம் செலுத்திய ஹார்திக் பாண்டியா, டி20 உலக கோப்பையில் துணை கேப்டனாக இடம் பிடித்திருக்கிறார்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து பந்து வீசி வருவதன் மூலம் தன்னுடைய பழைய பார்மை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு வருகிறார். இன்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டார். நான்கு ஓவர்கள் வீசிய ஹர்திக் பாண்டியா, 31 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் நிதீஷ் குமார் ரெட்டி,சபாஷ் அஹமத், மார்க்கோ யான்சன் போன்ற வீரர்களின் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்தி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் லக்னோ அணிக்கு எதிராக இரண்டு விக்கெட்டுகள், கொல்கத்தா அணிக்கு எதிராக இரண்டு விக்கெட்டுகள் என மூன்று போட்டிகளில் 7 விக்கெட்டுகளை ஹர்திக் பாண்டியா வீழ்த்தி இருக்கிறார் ஹர்திக் பாண்டியா தற்போது பவுலிங் தன்னுடைய இழந்த ஃபார்மை மீட்டிருப்பது மும்பை அணிக்கு எவ்வளவு நல்லதோ அதைவிட இந்திய அணிக்கு தான் மிகவும் முக்கியம். ஏனென்றால் ஹர்திக் பந்து வீச்சு டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.