Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SRh vs MI : ஐபிஎல் வரலாற்றிலேயே பிரம்மாண்ட சாதனை.. மிக அதிக சிக்ஸர் அடிக்கப்பட்ட ஐபிஎல் போட்டி

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிக சிக்ஸ் அடிக்கப்பட்டது. இதுவரை 33 சிக்ஸ் அடிக்கப்பட்டதே ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் மிக அதிக சிக்ஸ் அடிக்கப்பட்ட சாதனையாக இருந்தது.

அந்த சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி முறியடித்தது. சன்ரைசர்ஸ் அணி 18 சிக்ஸ் அடித்த நிலையில், அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 சிக்ஸ் அடித்தது. இந்தப் போட்டியில் மொத்தம் 38 சிக்ஸ் அடிக்கப்பட்டது.

IPL 2024 SRH vs MI Most Sixes in an IP match record broken in SRH vs MI match

இதற்கு முன் 2018இல் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியிலும், 2021இல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டியிலும் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு இருந்தன. அந்த சாதனையை இந்தப் போட்டி முறியடித்து இருக்கிறது.

இது ஐபிஎல் தொடரில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த டி20 போட்டி வரலாற்றில் ஒரே போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸ் எண்ணிக்கையும் இதுவே ஆகும்.

இந்தப் போட்டியில் 523 ரன்கள் குவிக்கப்பட்டதும் ஐபிஎல் வரலாற்றில் மிகப் பெரிய சாதனை ஆகும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 277 ரன்கள் குவித்த நிலையில், அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 246 ரன்கள் குவித்தது.

Story first published: Thursday, March 28, 2024, 0:01 [IST]
Other articles published on Mar 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+