17 வயது சிறுவனின் கனவை உடைத்து எறிந்த ட்ராவிஸ் ஹெட்.. ஈவு இரக்கமே இல்லாமல் அடித்த உலகக்கோப்பை நாயகன்
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் பல்வேறு ஐபிஎல் சாதனைகள் அடித்து உடைக்கப்பட்டன. மும்பை அணியில் அறிமுகமான வேனா மாப்கா என்ற 17 வயதேயான தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளருக்கு இந்தப் போட்டி மிக மோசமான நினைவாக அமைந்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் மாப்கா வீசிய போட்டியின் மூன்றாவது ஓவரில் கடைசி 4 பந்துகளில் இரண்டு சிக்ஸ், இரண்டு ஃபோர் அடித்து 20 ரன்கள் சேர்த்தார் ட்ராவிஸ் ஹெட். அந்த ஓவரில் மட்டுமே 22 ரன்கள் எடுக்கப்பட்டது. அதன் பின் மாப்கா 4 ஓவர்களில் 66 ரன்கள் கொடுத்தார்.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரரின் அறிமுகப் போட்டியில் மோசமான பந்துவீச்சு இது தான். உலகின் முன்னணி கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரில் 17 வயதிலேயே வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மாப்கா மகிழ்ச்சிக் கடலில் இருந்த நிலையில், அவரது கனவை அவர் வீசிய இரண்டாவது ஓவரிலேயே கலைத்து விட்டார் ட்ராவிஸ் ஹெட்.
இந்தப் போட்டியில் ட்ராவிஸ் ஹெட் 18 பந்துகளில் அரைசதம் அடித்தார்,. அபிஷேக் சர்மா 16 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர்களின் சாதனை அரைசதத்தை தொடர்ந்து சன்ரைசர்ஸ் அணி அதிரடியாக ரன் குவித்தது. 20 ஓவர்களில் 277 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப் பெரிய ஸ்கோரை பதிவு செய்தது. ட்ராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 62 ரன்களும், அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ரன்களும், ஐடன் மார்கிரம் 28 பந்துகளில் 42 ரன்களும், கிளாசன் 34 பந்துகளில் 80 ரன்களும் குவித்தனர்.


Click it and Unblock the Notifications