Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SRH vs RCB : அம்மாவாசையாக ஆர்சிபி.. ஐதராபாத் அணிக்கு அடித்த ஆப்பு.. தெறிக்கும் விராட் கோலி மீம்ஸ்!

ஐதராபாத் : ஐதராபாத் - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

சந்திரமுகி படத்தில் வடிவேலு மனைவி சொர்ணாவிடம் பேச ரஜினிகாந்த் முயற்சிப்பார். அப்போது சரியாக மனைவி முன் நின்று வடிவேலு, என் காலே உடைந்தாலும் என் பொண்டாட்டியுடன் பேசவிட மாட்டேன் என்று மனதிற்குள் சொல்வார். அதுபோல் நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி உடனடியாக பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை வடிவேலுவாக ஆர்சிபி அணியை மாற்றி, மேட்ச் தோற்றாலும் பரவாயில்லை டா.. உன்னைய 300 மட்டும் அடிக்க விட மாட்டோம் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

IPL 2024 SRH vs RCB Match Fantastic memes from social media after RCB won by 35 runs against SRH at Hyderabad

3 படத்தில் தனுஷ், இயற்பியலில் மட்டும் நல்ல மதிப்பெண் எடுக்கும் போது, எப்புட்றா என்று ஆசிரியர் கேள்வி எழுப்புவார். அதற்கு தனுஷ், ட்யூசன் போகிறேன் சார் என்பார். அதற்கு மீண்டும் ஆசிரியர், டேய் முண்டம்.. மற்ற சப்ஜட்ஸ்-க்கும் ட்யூசன் போகலாம்ல என்று அட்வைஸ் செய்வார். அதனை மாற்றி, மார்ச் 25க்கு அடுத்து ஏப்ரல் 25க்கு ஒரு மாதத்திற்கு பின் ஆர்சிபி அடைந்த வெற்றியை கிண்டல் செய்யும் வகையில், "டேய் முண்டம்.. 25ல் மட்டும் ஜெய்க்கிற மாதிரி, எல்லா மேட்சும் ஜெய்க்க வேண்டியது தான்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா.

IPL 2024 SRH vs RCB Match Fantastic memes from social media after RCB won by 35 runs against SRH at Hyderabad

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியை பார்த்து சிவகார்த்திகேயன், "யாரு.. பிச்சை மவனா" கிண்டல் தொனியில் கேட்பார். அதனை அப்படியே சிவகார்த்திகேயனாக ஆர்சிபி அணியையும், சூரியாக ஐதராபாத் அணியையும் மாற்றி, "யாரு.. 263 ரன்கள் ரெக்கார்டை பிரேக் பண்ணவனா" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் தரமான தக் லைஃப் சம்பவம்.

IPL 2024 SRH vs RCB Match Fantastic memes from social media after RCB won by 35 runs against SRH at Hyderabad

அமைதி படை படத்தில் எம்எல்ஏ பதவி உறுதியான பின், மணிவண்ணன் தொடையில் கால்களை வைத்து சத்யராஜ் லந்து கொடுப்பார். அதற்கு மணிவண்ணன் அம்மாவாசை.. கால் படுது என்று சொல்ல.. பதிலுக்கு சத்யராஜ், "கால் படுதுனு தெரியுதுல.. தள்ளி நிக்கலாம்ல" என்பார். இதனை மணிவண்ணனாக ஐதராபாத் அணியையும், ஆர்சிபி அணியாக சத்யராஜையும் மாற்றி, "கால் பட்டா தள்ளி நில்லுடா" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ்.

IPL 2024 SRH vs RCB Match Fantastic memes from social media after RCB won by 35 runs against SRH at Hyderabad
Story first published: Friday, April 26, 2024, 10:13 [IST]
Other articles published on Apr 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+