Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு சீசனிலும் எப்போதுமே ஒரு இளம் வீரர் பெரிய ஸ்டார் அந்தஸ்தை பெறுவார். நமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆதரவைப் பெறுவார்.

அந்த வகையில் கடந்த சீசனில் ரிங்கு சிங் இருந்த நிலையில் தற்போது 22 வயதான ஒரு வீரருக்கு ஸ்டார் அந்தஸ்த் பெரும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கும் வீரர் என்றால் அது சூரியகுமார் யாதவ் தான்.

IPL 2024 - Suryakumar yadav lauds Riyan Parag as completely changed guy

அப்படிப்பட்ட சூரியகுமார் யாதவே, ஒரு வீரரை பாராட்டி இருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு திறமையானவராக இருந்திருப்பார். அது வேறு யாருமல்ல ரசிகர்களால் கடந்த காலங்களில் வெறுக்கப்பட்டு விமர்சிக்கப்பட்ட 22 வயது வீரரான ரியான் பராக் தான். அசாமை சேர்ந்த அவர் இளம் வயதிலேயே ஐபிஎல் தொடருக்கு வந்து விட்டார்.எனினும் களத்தில் எப்படி நடந்து கொள்வது? ரசிகர்களிடம் எப்படி பேசுவது என்று முதிர்ச்சி இல்லாமல் அவர் நடந்து கொண்டார்.

இதனால், ரசிகர்கள் அவரை எப்போதுமே பொழப்பார்கள். அவரிடம் திறமை இருந்தும் கடந்த சீசன்களில் அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் ரியான் பராக் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் புதிய ஒரு வீரராக களத்திற்கு திரும்பி இருக்கிறார். லக்னோ அணிக்கு எதிரான முதல் போட்டியில் 43 ரன்கள் விளாசிய ரியான் பராக், இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக ராஜஸ்தான அணி கடுமையாக தடுமாறிய போது 45 பந்துகளை எதிர் கொண்டு 84 ரன்கள் விளாசி இருக்கிறார்.

இதில் ஆறு சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும். குறிப்பாக தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் நோக்கியாவை எதிர்கொண்ட ரியான் பராக்ழ் கடைசி ஓவரில் மட்டும் 25 ரன்களை விளாசினார். இதில் மூன்று பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் ரியான் பராக்கை ரசிகர்கள் ஆசிரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள சூரியகுமார் யாதவ், தேசிய கிரிக்கெட் அகாடமியில் தாம் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது ஒரு இளைஞனைப் பார்த்தேன். அவருக்கு காலில் லேசான காயம் இருந்தது. அந்த அகாடமியில் இருந்த முழு நேரமும் அவர் தன்னுடைய உடல் தகுதியை மீட்கும் முயற்சியிலே கவனம் செலுத்தி வந்தார். கடும் உழைப்பை மேற்கொண்டார்.

மேலும் புதிய திறமைகளை கற்றுக் கொள்ள அவர் கடுமையாக முயற்சித்தார். அந்த இளைஞனைப் பார்த்து என்னுடைய பயிற்சியாளரிடம் சொன்னேன். இந்த பையன் நிச்சயம் மாறிட்டார் தற்போது பெரிய ஆளாக வரப்போகிறார் என்று கூறினேன். தற்போது இன்றைய ஆட்டத்தை நான் பார்த்தவுடன் நான் சொன்னது தவறு இல்லை என்று புரிந்து கொண்டேன். ரியான் பராக் 2.0 வந்துவிட்டார். இனி அவரை கவனியுங்கள் என்று சூரியகுமார் யாதவ் பாராட்டி இருக்கிறார்.

Story first published: Friday, March 29, 2024, 7:23 [IST]
Other articles published on Mar 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+