Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்களுக்கு காது குத்திய பிசிசிஐ.. டி20 உலக கோப்பைக்கு தேர்வான இந்திய அணி வீரர்களின் லட்சணம்

சென்னை : டி20 உலக கோப்பையில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் தங்களை உயிரைக் கொடுத்து விளையாடினார்கள். டி20 தொடரில் வீரர்கள் எப்படி விளையாடுகிறார்களோ, அதை வைத்து தான் இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்று செய்திகள் வெளியானது.

இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் நன்மதிப்பை பெற்றனர். குறிப்பாக சிஎஸ்கே அணியின் சிவம் துபே களத்தில் அதிரடியாக விளையாடி சிக்ஸர் சிக்ஸர் ஆக குவித்து ரசிகர்களிடம் நல்ல பெயரை பெற்றார்.

IPL 2024 - t20 World cup selected Indian Players struggling for Past 2 days

இதன் அடிப்படையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி நேற்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் களமிறங்கினர். ஐபிஎல் தொடரில் வீரர்களின் பார்மை பார்த்து இம்முறை உலக கோப்பையை வெல்ல முடியுமா? முடியாதா? என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

ஆனால் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்த இந்த இரண்டு நாட்களில் முன்னணி வீரர்கள் பலரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் நான்கு ரன்களில் ஆட்டம் இழந்தார். இதேபோன்று டி20 கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் ஆன சூரியகுமார் யாதவ் ஆறு பந்துகளை எதிர்கொண்டு 10 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இந்திய டி20 அணியின் துணை கேப்டனான ஹர்திக் பாண்டியா டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்த தொடர் முழுவதும் அபாரமாக விளையாடி வந்த சிவம் துபே நேற்று அணியில் இடம் கிடைத்தவுடன் தற்போது டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார். இதேபோன்று ஆல்ரவுண்டரான ஜடேஜா நான்கு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு இரண்டு ரன்கள் சேர்த்தார்.

இதேபோன்று டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள ஆர்ஸ்தீப் சிங் பந்துவீச்சில் தடுமாறு வருகிறார். சிஎஸ்கே எதிராக இரண்டு ஓவர்கள் வீசி 22 ரன்கள் அவர் விட்டுக் கொடுத்தார். இப்படி டி20 உலக கோப்பை அணியில் இடம் பிடித்திருக்கும் பல முன்னணி வீரர்கள் தடுமாறி வருவது ரசிகர்களை கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Story first published: Wednesday, May 1, 2024, 21:06 [IST]
Other articles published on May 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+