Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 : ஐபிஎல் தொடரில் சரித்திரம் படைத்த தமிழன்.. கோலியால் கூட செய்ய முடியாத மாபெரும் சாதனை

சென்னை : ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் மாபெரும் சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார். ஐபிஎல் தொடரில் 17 இன்னிங்ஸ் முடிவில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்துள்ள விராட் கோலி கூட 17 இன்னிங்ஸில் குறைவான ரன்களே சேர்த்து இருந்தார். ஆனால், சாய் சுதர்ஷன் பல ஜாம்பவான்களை எல்லாம் முந்தி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சாய் சுதர்ஷன் 2023 ஐபிஎல் தொடரில் அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக மாறினர். அந்த தொடரின் இறுதிப் போட்டியில் 96 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின் இந்திய அணியிலும் வாய்ப்பு பெற்றார்.

IPL 2024 Tamilnadu player Sai Sudharshan scored most runs after 17 innings in IPL

இந்த நிலையில், 2024 ஐபிஎல் தொடரிலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடி வருகிறார் சாய் சுதர்ஷன். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 19 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார். அதன் மூலம் ஐபிஎல் தொடரில் 667 ரன்கள் சேர்த்தார். 17 இன்னிங்ஸ்களில் 667 ரன்கள் எடுத்து இருக்கிறார் சாய் சுதர்ஷன்.

ஐபிஎல் தொடரில் தங்களின் முதல் 17 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட்டை முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளார் சாய் சுதர்ஷன். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் கவுதம் கம்பீர், நான்காவது இடத்தில் திலக் வர்மா, ஐந்தாவது இடத்தில் ரோஹித் சர்மா ஆகியோர் உள்ளனர். கம்பீர், ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர்களை எல்லாம் முந்தியதோடு, அடுத்த தலைமுறையின் முக்கிய வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா ஆகியோரையும் முந்தி இருக்கிறார் சாய் சுதர்ஷன்.

ஐபிஎல் தொடரில் முதல் 17 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் :

667 ரன்கள் - சாய் சுதர்சன்
611 ரன்கள் - ருதுராஜ் கெய்க்வாட்
565 ரன்கள் - கௌதம் கம்பீர்
540 ரன்கள் - திலக் வர்மா
530 ரன்கள் - ரோஹித் சர்மா
509 ரன்கள் - தேவ்தத் படிக்கல்
505 ரன்கள் - ராகுல் டிராவிட்

Story first published: Friday, April 5, 2024, 11:31 [IST]
Other articles published on Apr 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+