ஐபிஎல் வரலாற்றிலேயே நம்பர் 1.. விராட் கோலியையே முந்திய அதிரடி மன்னன்.. மெகா சாதனை
சென்னை : 2024 ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இந்த நிலையில் விராட் கோலி, டேவிட் வார்னரின் சாதனை ஒன்றை முறியடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் விராட் கோலி இதுவரை 50 அரைசதம் அடித்து இருக்கிறார். மற்றொரு இந்திய வீரரான ஷிகர் தவானும் 50 அரைசதம் அடித்து இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 61 அரை சதங்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார். விராட் கோலியால் ஷிகர் தவான் சாதனையை முந்தி ஐபிஎல் தொடரில் அதிக அரைசதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெறலாம். ஆனால், டேவிட் வார்னர் சாதனையை முந்துவது அத்தனை எளிதல்ல.
2024 ஐபிஎல் தொடரிலும் டேவிட் வார்னர் விளையாட இருக்கிறார். இந்த முறையும் அவர் சில அரைசதங்கள் அடிக்கக் கூடும். அந்த வகையில் அவர் இந்த ஆண்டு அடிக்கும் அறைசதங்களை தாண்டி 12 அரைசதங்கள் அடித்தால் மட்டுமே விராட் கோலியால் வார்னர் சாதனையை முந்த முடியும். அது 2024 ஐபிஎல் தொடருக்குள் நடக்க வாய்ப்பு இல்லை.
என்ன தான் டேவிட் வார்னர் அதிக அரைசதங்கள் அடித்து இருந்தாலும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ள பேட்ஸ்மேன் விராட் கோலி தான். விராட் கோலி 229 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 7263 ரன்கள் குவித்துள்ளார். டேவிட் வார்னர் 176 இன்னிங்ஸ்களில் பங்கேற்று 6397 ரன்கள் குவித்துள்ளார். வார்னர் குறைவான ரன்கள் குவித்து இருந்தாலும், கோலியை விட சிறந்த பேட்டிங் சராசரி வைத்துள்ளார். விராட் கோலியின் ஐபிஎல் பேட்டிங் சராசரி 37.24 ஆகும். டேவிட் வார்னர் 41.53 பேட்டிங் சராசரி வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications