Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி அவுட்டானதற்கு காரணமே கோலி தான்.. ஒரே ஒரு பிளானால், சிஎஸ்கேவை காலி செய்த கிங்

பெங்களூர் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபிஐ எதிர்கொண்டு தோல்வியை தழுவியது. இதன் மூலம் ரன் ரேட் அடிப்படையில் ஆர் சி பி அணி பிளே ஆப் சுற்றில் இருந்து தகுதி பெறாமல் வெளியேறிவிட்டது.

இந்த நிலையில் கடைசி ஓவரில் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தோனி முதல் பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தினார். இதனால் ஐந்து பந்துக்கு 11 ரன்கள் தேவை என்ற இலக்கு மாறியது.

IPL 2024 - Virat kohli is the main reason behind dhoni dismissal

அப்போதுதான் விராட் கோலி பந்துவீச்சாளர் யாஷ் தயாலிடம் ஒரு பிளானை போட்டு கொடுத்திருக்கிறார். அதனை யாஷ் தயால் பின்பற்றியதால் அடுத்த பந்திலே தோனி விக்கெட்டை ஆர்சிபி எடுத்திருக்கிறது. பந்து ஏற்கனவே ஈரமாக இருந்ததால், கடைசி ஓவரில் யாக்கர்கள் வீசுவது மிகவும் கடினம். இதில் கொஞ்சம் பந்தில் லென்த் மிஸ் ஆனால் கூட அதனை பேட்ஸ்மேன்கள் தூக்கி சிக்ஸர் அடித்து விடுவார்கள்.

இதனால் விராட் கோலி யாஷ் தயாலிடம் சென்று எக்காரணத்தைக் கொண்டும் யாக்கர்களை வீச வேண்டாம் என்றும் பந்தின் வேகத்தை குறைத்து வீச வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதனை யாஷ் தயாலிடம் சிறப்பாக செய்து காட்டினார். பந்தின் வேகத்தை 110 கிலோமீட்டர் 108 கிலோமீட்டர் என குறைத்து வீச அதனை அடிக்க முடியாமல் சிஎஸ்கே வீரர்கள் தடுமாறினர்.

தோனியும் இதேபோல் ஒரு ஷாட்டை அடித்து தான் கேட்ச் ஆனார். இதனால் சிஎஸ்கே அணி தோல்வி பெற்றது மட்டுமல்லாமல் விளையாட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலைக்கு காரணம் விராட் கோலி போட்ட அந்த பிளான் தான் என்று தற்போது வெளியாகியுள்ளது. விராட் கோலி தம்மிடம் இந்த திட்டத்தை கூறியதாகவும் அதனை சரியான முறையில் செய்ததாகவும் யாஷ் தயால் தெரிவித்தார். இதேபோன்று ஆர்சிபி அணியின் இந்த வெற்றிக்கு பவுலர்கள்தான் காரணம் என்றும் டிப்ளசிஸ் பாராட்டு தெரிவித்தார்.

Story first published: Sunday, May 19, 2024, 22:10 [IST]
Other articles published on May 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+