Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி ஓய்வு பெற்றுவிடுவார்.. அவரை போல் சர்ச்சையான நபர் தேவை.. இங்கிலாந்து வீரர் கருத்து

பெங்களூர் : சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது அதிக ரசிகர்கள் கொண்ட வீரர்களில் ஒருவராக விராட் கோலி இருக்கிறார். விராட் கோலிக்கு தற்போது வயது 35 ஆகிறது. இந்த நிலையில், விராட் கோலி டி20 உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்ற செய்தி வெளியானது.

இந்த நிலையில் விராட் கோலி தற்போது வயதாகி வருவதால் அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் கணித்திருக்கிறார். இது குறித்து தற்போது பார்க்கலாம்.

IPL 2024 - Virat kohli might retires from cricket if he thoughts to lead normal life says vaughan

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்ற போது விராட் கோலி கிரிக்கெட் விட்டு நகர்ந்து இருந்தார். அப்போது அவர் குடும்பத்துடன் லண்டனில் தங்கி சாதாரண ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததாக நான் படித்தேன். மேலும் பிரபலமான இந்த வாழ்க்கையை கைவிட்டு சாதாரண வாழ்க்கையை கோலி விரும்புவதாகவும், நான் சில செய்தியில் படித்தேன்.

இதன் மூலம் கிரிக்கெட்டை விட்டு விலகிவிடலாம் என்ற நினைப்பு விராட் கோலிக்கு நிச்சயம் தோன்றியிருக்கும். இதனால் எப்போது தான் சாதாரண வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புகிறாரோ, அப்போது விராட் கோலி நிச்சயம் ஓய்வு பெற்று விடுவார். நடப்பு ஐபிஎல் தொடர் விராட் கோலிக்கு சிறப்பாகவே அமைந்தது.

நிச்சயம் கிரிக்கெட் விளையாடியதில் சிறந்த வீரர்களில் ஒருவராக விராட் கோலி அறியப்படுவார். டி20 தற்போது மாறி வருகிறது. இந்த காலத்திற்கு ஏற்பவும் விராட் கோலி தன்னுடைய ஆட்டத்தை மெருகேற்றி இருக்கிறார். மேலும் வெற்றி பெற வேண்டும் என்ற நினைப்பு விராட் கோலிக்கு எப்போதும் இருக்கின்றது. விராட் கோலி களத்தில் ஆரவாரமாக செயல்படுவது எனக்கு எப்போதுமே பிடிக்கும்.

இதன் மூலம் அவர் ஆட்டத்தில் எப்போதுமே ஒரு சலசலப்பை ஏற்படுத்தி வருவார். கேமராவை நோக்கி பார்வையாளர்களை பார்த்து வாயை மூடுங்கள் என்று கூறுவது போன்ற குணாதிசயங்கள் நிச்சயம் விளையாட்டு துறைக்கு வேண்டும். இது போல் சர்ச்சை ஏற்படுத்தும் நபர்களை தான் ரசிகர்கள் உற்று நோக்குவார்கள் என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, May 24, 2024, 15:24 [IST]
Other articles published on May 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+