Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சமாவது நியாயம் வேண்டாமா? டெல்லியின் சொந்த ஊர் விசாகப்பட்டினமா? திடீரென்று இப்படி மாற்றியது ஏன்?

விசாகப்பட்டினம் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் சொந்த மண்ணில் ஏழு போட்டிகளும் அன்னிய மண்ணில் ஏழு போட்டிகள் என மொத்தம் 14 லீக் போட்டிகளில் விளையாடும். இதில் சொந்த மண்ணில் விளையாடும் போட்டிகள் மிகவும் முக்கியமாகும். ஏனென்றால் சொந்த மண்ணில் ஆடுகளம் எவ்வாறு இருக்கும், ஆடுகளம் எவ்வாறு அமைக்கப்படும் போன்ற விஷயங்கள் எல்லாம் அந்தந்த வீரர்களுக்கு தெரியும்.

மேலும் ரசிகர்களின் ஆதரவு என பல அம்சங்களும் சொந்த மண்ணில் ஒவ்வொரு அணியும் அந்தப் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கும். சிஎஸ்கே போன்ற அணியை எடுத்துக் கொண்டால் சொந்த மண்ணில் அவர்கள் அபாரமாக விளையாடி அதிக வெற்றிகளை பெற்றிருப்பார்கள். எந்த அணி தங்களுக்கு சொந்த மண்ணில் சொதப்புகிறதோ அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல ஆர் சி பி போல் தடுமாறுவார்கள்.

IPL 2024 - Why Delhi capitals home game played in Vishakapatinam

இந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இம்முறை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. தங்களுடைய 2024 ஆம் ஆண்டு சீசனில் முதல் போட்டி பஞ்சாப் உடன் விளையாடி தோல்வியை தழுவிய பிறகு இரண்டாவது போட்டியில் ஜெய்ப்பூரில் விளையாடி ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவினார்கள்.

இப்படி இரண்டு போட்டிகளிலும் தோற்ற நிலையில் தங்களுடைய மூன்றாவது போட்டியை அவர்கள் சொந்த மண்ணில் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த சொந்த மண் என்பது டெல்லி கிடையாது, விசாகப்பட்டினம் என்று அறிந்தவுடன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். WPL போட்டிகள் எல்லாம் டெல்லியில் நடைபெற்ற நிலையில் ஏன் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல் அணிக்கு விசாகப்பட்டினத்தில் போட்டி நடத்தப்படுகிறது என்று ரசிகர்கள் சந்தேகம் அடைந்தனர்.

டெல்லியில் தேர்தல் கூட இப்போது கிடையாது. அப்படி இருக்கும்போது டெல்லியில் போட்டியில் நடத்தி இருக்கலாமே என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. மகளிர் பிரீமியர் லீக் தொடர் டெல்லியில் பெருவாரியான போட்டிகள் நடத்தப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் 13 நாட்களில் 11 போட்டிகள் அந்த மைதானத்தில் நடத்தப்பட்டது.

இதனால் மைதானம் பெரும் சேதம் அடைந்ததால் அதனை சரி செய்வதற்கு பத்து நாட்கள் போதாது என்று கூறப்பட்டிருக்கிறது. டெல்லி மைதானத்தை சரி செய்வதற்கு தங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகும் என்றும் டெல்லி கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது. இதனால் டெல்லியில் போட்டி நடத்தப்பட முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பிறகு பிசிசிஐ சார்பில் டெல்லியில் தவிர முதல் சில போட்டிகளை எங்கு விளையாட நீங்கள் விருப்பம் தெரிவிக்கிறீர்கள் என டெல்லி அணி நிர்வாகத்திற்கு பிசிசிஐ வாய்ப்பு கொடுத்தது.

இதனை அடுத்து டெல்லி அணி தாங்கள் விசாகப்பட்டினத்தில் விளையாடுகிறோம் என முடிவு எடுத்தது. இதனை அடுத்து டெல்லி அணி தங்களுடைய சொந்த மண்ணாக விசாகப்பட்டினத்தை தேர்வு செய்து அங்கு 5 போட்டிகளில் விளையாடுகிறது. டெல்லி பெரோசா கோட்லா மைதானம் தயாரான பிறகு அந்த அணி கடைசி ஐந்து போட்டிகளை அங்கு தான் விளையாடப் போகிறது.

விசாகப்பட்டினம் ஏற்கனவே பல ஐபிஎல் போட்டிகளை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2012 ஆம் ஆண்டில் டெக்கான் சார்ஜஸ் இருந்தபோது அங்கு இரண்டு போட்டிகள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விசாகப்பட்டினத்தில் மூன்று போட்டிகள் 2015 ஆம் ஆண்டு விளையாடி இருக்கிறது. இதேபோல் 2016 ஆம் ஆண்டு மும்பை அணி விசாகப்பட்டினத்தில் மூன்று போட்டிகளும் புனே அணியா விசாகப்பட்டினத்தில் மூன்று போட்டிகளும் விளையாடி உள்ளது. இதேபோன்று 2019 ஆம் ஆண்டு எலிமினேட்டர் இரண்டாவது குவாலிபயர் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்திருக்கிறது.

Story first published: Sunday, March 31, 2024, 21:56 [IST]
Other articles published on Mar 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+