Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 - ரோகித் சர்மா உள்ளிட்ட 5 ஸ்டார் வீரர்கள் விடுவிக்கப்பட வாய்ப்பு

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பு எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். எத்தனை ரைட் டு மேட்ச் கார்டு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறித்து பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் எட்டு வீரர்களை தக்க வைத்துக்கொள்ள யோசித்து வரும் நிலையில், பிசிசிஐ ஆறு வீரர்களை மட்டும் தான் மீண்டும் தேர்வு செய்து கொள்ள அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ipl 2025 rohit sharma rcb cricket 2025

இதைப் போன்று தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ள நிலையில் வரும் மெகா ஏலத்திற்கு முன்பு 5 மிகப்பெரிய வீரர்கள் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்ற செய்திகள் வெளியாகி உள்ளது. அது யார் என்று தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் ரோகித் சர்மா.

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த ரோகித் சர்மா, அந்த அணிக்காக ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். இந்த சூழலில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில்,அவர் தற்போது வேறு அணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் கே எல் ராகுல்.

லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே எல் ராகுல், கடந்த சீசனில் அணியின் உரிமையாளர் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் லக்னோ அங்கு புதிய கேப்டனை தேர்வு செய்யும் பணியில் அந்த அணி நிர்வாகம் இருக்கிறது. மேலும் ராகுல் தற்போது இந்திய டி20 அணியிலும் இடம் பெறவில்லை.

இதனால் கே எல் ராகுல் லக்னோ அணியிலிருந்து விலகி பெங்களூருக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதேபோன்று ஆர்சிபி அணியின் கேப்டனான டுப்ளசிஸ் கடந்த சீசனில் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 40 வயதாக இருக்கும் டுபிளசிஸ் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்துள்ளது. இதனால் அவரை நீக்கிவிட்டு புதிய கேப்டனை தேர்வு செய்யலாம் என்ற முடிவில் ஆர் சி பி இருக்கிறது.

இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் வெங்கடேஷ் ஐயர். கொல்கத்தா அணியின் முக்கிய வீரராக கடந்த சீசன்களில் வெங்கடேஸ் ஐயர் இருந்திருக்கிறார். இந்த நிலையில் வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணியை விட்டு விலகி வேறு அணிக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அது மட்டுமல்லாமல் சுனில் நரைன், ரஸில், ஸ்டார்க், பில் சால்ட், ஸ்ரேயாஸ் போன்ற வீரர்களை தக்க வைக்கும் முடிவில் கேகேஆர் அணி இருப்பதால் வெங்கடேஸ் ஐயருக்கு இடம் இருக்காது.

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல். கடந்த 2024 ஆம் ஆண்டு ஐ பி எல் சீசனில் மேக்ஸ்வெல் மோசமாக விளையாடியிருக்கிறார். அவருக்கு 14 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து ஆர் சி பி அணி ஏலத்தில் எடுத்தது. மேலும் மேக்ஸ்வெலுக்கு தற்போது வயசாகி வருவதால், அவரை அணியிலிருந்து விடுவித்து புதிய வீரரை தேர்வு செய்ய ஆர் சி பி முடிவு எடுத்திருக்கிறது. இதனால் மேக்ஸ்வெல் லக்னோ அல்லது மீண்டும் பஞ்சாப் அணிக்கு சொல்வார் என தெரிகிறது.

Story first published: Tuesday, September 24, 2024, 12:51 [IST]
Other articles published on Sep 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+