மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் பல இளம் வீரர்களுக்கு தங்களுடைய திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. எவ்வளவுதான் ரஞ்சிப் போட்டி விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடினாலும், ஐபிஎல் தொடரில் விளையாடும் போது தான் அது ரசிகர்களின் கவனத்தை பெறுகிறது.
இதனால் ரஞ்சி தொடரிலும் சிறப்பாக விளையாடி, ஐபிஎல் தொடரிலும் கலக்கும் வீரர்களுக்கு பிசிசிஐ முன்னுரிமை அளிக்கின்றது. அந்த வகையில் ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடன் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடன் இங்கிலாந்துக்கு செல்கிறது. இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்திய டெஸ்ட் அணியிலும் இடம் பிடிப்பார்கள் என தெரிகிறது. தற்போது டெஸ்ட் அணியில் விராட் கோலி, கில், ராகுல் ரோகித் சர்மா ஜெய்ஸ்வால் ஆகியோர் மெயின் அணியில் கண்டிப்பாக இடம் பெறுவார்கள்.
இதே போன்று நிதீஷ் குமார் ரெட்டி ஆல்ரவுண்டராக இடம் பெறுவாரா என்ற கேள்வியும் இருந்துள்ளது. இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இருக்கும் சாய் சுதர்சனை இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்ய பிசிசிஐ யோசித்து வருகிறது. சாய் சுதர்சன் தற்போது ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றிருக்கிறார். ரஞ்சி போட்டியிலும் அபாரமாக விளையாடி இருக்கிறார். இதேபோன்று இந்திய அணிக்காக விளையாடி பல ஆண்டுகள் ஆகும் கருண் நாயரையும் சேர்க்க பிசிசிஐ முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
சமீபகாலமாக இந்திய அணிக்கு சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் பெயரும் டெஸ்ட் அணியில் கம்பக் கொடுக்கப் போகிறார். மேலும் rcb அணியின் கேப்டனான ரஜத் பட்டிதார் ஏற்கனவே இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தாலும், பெரிய அளவு சரியாக செயல்படாததால் அதிரடியாக நீக்கப்பட்டார்.
தற்போது ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி வரும் ரஜத் பட்டிதார் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறார். இதனால் அவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று ஆர்சிபி அணிக்காக விளையாடும் படிக்கல் பெயரும் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. தற்போது ஐபிஎல் தொடரில் இல்லை என்றாலும் இந்திய ஏ அணியில் தேர்வு செய்யப்படுவார் என்ற தகவலும் உறுதியாகியுள்ளது.