Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- 17 வயது மும்பை வீரரை தட்டி தூக்க போகும் சிஎஸ்கே.. பயிற்சிக்கு அழைத்த நிர்வாகம்

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு இன்னும் 12 நாட்கள் தான் உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை தேர்வு செய்வது என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.

குறிப்பாக ஒவ்வொரு அணியும் 5 முதல் 6 வீரர்கள் தக்கவைத்துக் கொண்டிருப்பதால் குறைவான அளவில் பணம் இருக்கிறது. இதனால் எஞ்சிய வீரர்களுக்கு அதிக பணம் கொடுக்க முடியாது என்பதால் இளம் வீரர்களை அதிக அளவு வாங்க ஒவ்வொரு அணியும் தீவிரம் காட்டி வருகிறது.

ipl 2025 csk ayush mhatre

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புது வீரர்களை தேர்வு செய்யும் குழு ஒன்று மும்பையைச் சேர்ந்த 17 வயது வீரரான ஆயுஷ் என்பவரை குறி வைத்திருக்கிறது. டொமஸ்டிக் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கு ஆயுஷ் அறிமுகமாகி விளையாடினார். ரஞ்சித் தொடரில் தன்னுடைய முதல் போட்டியில் அரை சதம் அடித்த ஆயுஷ் பின்னர் மகாராஷ்டிராவிற்கு எதிரான ஆட்டத்தில் 232 பந்துகளில் 176 ரன்கள் குவித்தார்.

இதுவரை ஐந்து முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள ஆயுஷ் 321 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் ஒரு சதம், ஒரு அரை சதம் அடங்கும். ஆயுஷ் அபாரமாக விளையாடும் திறமையை கொண்டிருப்பதாலும் அவரிடம் ருதுராஜ் போன்ற கிரிக்கெட் யுக்தி இருப்பதாலும் அவரை அழைத்து திறன் பரிசோதனை முகாமில் பங்கேற்க தோனி கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த சூழ்நிலையில் நவம்பர் 16 முதல் 23ஆம் தேதி வரை 6 நாள் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் ஓய்வு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் ஆயுஷை சென்னைக்கு அழைத்து வந்து அவர் எப்படி விளையாடுகிறார் என்று பார்க்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறது. இதில் ஆயுஷ் வெற்றி பெற்றால் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை குறிவைத்து எடுக்கும்.

இந்த சூழலில் ஆயுஷை சிஎஸ்கே அணி கண்டெடுத்து விட்டதால், மற்ற அணிகளும் அவரை பயிற்சி முகாமுக்கு அழைத்து இருக்கிறது. இதனால் ஆயுஷ் மெகா ஏலத்தில் பல கோடி ரூபாய்க்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Story first published: Tuesday, November 12, 2024, 14:44 [IST]
Other articles published on Nov 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+