For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆர்சிபி உடனான பகை! வெளிப்படையாக அறிவித்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்.. அடுத்த சீசன் இருக்கு டா கச்சேரி!

பெங்களூர் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் ஆர் சி பி அணி மீது இருக்கும் தனது கடுப்பை வெளிப்படையாக அறிவித்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சரிசமமான எதிரி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணிதான்.

இருவரும் இதுவரை ஐந்து முறை கோப்பையை வென்றிருக்கிறார்கள். ஆனால் ஆர்சிபி ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் அவருடைய ரசிகர்கள் வாய் சவடால் விட்டு சிஎஸ்கே விடம் அடிவாங்குவார்கள்.

ipl 2025 Ruturaj gaikwad csk vs rcb

இந்த நிலையில் கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தை ஆர்சிபி அணியுடன் விளையாடுகிறது. இது சிஎஸ்கே அணி குறிப்பிட்ட இலக்கை தாண்டி இருந்தாலும் பிளே ஆப் சுற்றுக்கு சென்று இருக்கலாம். ஆனால் சிஎஸ்கே அணி ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியது.

இதன் மூலம் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாத சூழல் ஏற்பட்டது. எனினும் தோனியின் கடைசி ஆட்டத்தை நாங்கள் குலைத்து விட்டோம் என ஆர் சி பி ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஏதோ சாம்பியன் பட்டத்தை வென்றது போல் ஆர் சி பி ரசிகர்கள் கொண்டாடியது மட்டுமல்லாமல் சிஎஸ்கே ரசிகர்களையும் கேலி கிண்டல் செய்து வெறுப்பை சம்பாதித்தார்கள்.

இந்த நிலையில் இது சிஎஸ்கே வீரர்களை கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் இம்முறை ஆர் சி பி அணியை பழிவாங்க வேண்டும் என்ற உத்வேகத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறது. இதனால் தான் தோனி கூட தனது ஓய்வு முடிவை தள்ளிப் போட்டு இருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியானது. இதனை வெளிப்படையாக அறிவிக்கும் விதமாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ருதுராஜ் பங்கு பெற்றார். அப்போது ருதுராஜ் பேசும்போது அவருடைய மைக் ஆப் செய்யப்பட்டது. இதனை அடுத்து மேடையில் இருந்த தொகுப்பாளர் ருதுராஜ் பேசும்போது அவருடைய மைக்கை ஆப் செய்தது யார் என்று கேட்டார். இதற்கு உடனடியாக பதில் அளித்த ருதுராஜ், ஆர்சிபி ரசிகர்கள் யாராவது இதை செய்திருக்கலாம் என்று கூறி சிரித்தார்.

உடனே அங்கு இருந்த ரசிகர்கள் அனைவரும் சிரித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆர் சி பி அணி மீது இருக்கும் கோபத்தை ருதுராஜ் வெளிப்படையாக அறிவித்து விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால் அடுத்த சீசன் ஆர் சி பி அணிக்கு மிகப்பெரிய பதிலடி காத்திருப்பதாக சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடிய வருகின்றனர்.

Story first published: Friday, December 20, 2024, 14:48 [IST]
Other articles published on Dec 20, 2024
English summary
IPL 2025- CSK Captain Ruturaj Gaikwad Witty Comment over RCB Wins the internet ஆர்சிபி உடனான பகை! வெளிப்படையாக அறிவித்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்.. அடுத்த சீசன் இருக்கு டா கச்சேரி!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+