Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 - அடுத்த ஆண்டு முதல் சிஎஸ்கேவில் புதிய பொறுப்பு.. ஒரிஜினல் "தல"யாக போகும் தோனி

சென்னை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நடந்திருப்பதை கிரிக்கெட் விமர்சகர்கள் கவனித்து இருக்கிறார்கள். குறிப்பாக ஏலம் நடைபெறும் போது நாம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சென்னைக்கு வந்து முகாமிட்டு எந்த வீரர்களை வாங்குவது? எந்த வீரர்களை வாங்காமல் விடுவது என்று ஆலோசனை நடத்துவார்கள்.

குறிப்பாக சில வீரரை எவ்வளவு பணம் கொடுத்து வாங்கலாம். குறிப்பிட்ட வீரருக்கு குறிப்பிட்ட தொகையை போதும், ஒரு வீரர் கிடைக்கவில்லை என்றால் அவருக்கு மாற்றாக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து எல்லாம் தோனி தான் சிஎஸ்கே அணிக்கு அறிவுரை கூறுவார்.

ipl auction 2025 ipl auction ipl 2025

ஆனால் இந்த மெகா ஏலத்தில் தோனி கண்டுகொள்ளவே இல்லை. ஏலம் தொடர்பாக தோனி சென்னைக்கு வந்து சிஎஸ்கே நிர்வாகிகளை சந்திக்கவும் இல்லை. இந்த சூழலில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜூம், பயிற்சியாளர் பிளமிங்குமே இணைந்து ஏலம் தொடர்பான யுக்திகளை கட்டமைத்து இருக்கிறார்கள்.

இதனால் தோனி நடப்பு சீசனில் வெறும் விக்கெட் கீப்பர் அல்லது இம்பேக்ட் வீரராக தான் விளையாடுவாரா என்று கேள்வியும் இருந்துள்ளது. இந்த தருணத்தில் தோனி ஐபிஎல் தொடரின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. சிஎஸ்கே அணியை தன்னுடைய முதல் குழந்தை போல் பாவித்து வந்த தோனி தற்போது ஏலம் தொடர்பாக எதையுமே கண்டுகொள்ளவில்லையே என்ற கவலை ரசிகர் மத்தியில் இருந்தாலும் இதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கின்றது.

தோனி அடுத்த சீசனில் வீரராக விளையாடவில்லை, என்றாலும் கண்டிப்பாக சிஎஸ்கே அணியில் முக்கிய பொறுப்புகளில் இருப்பார். ஆனால் அது மற்ற அணியில் இருக்கும் முன்னாள் வீரர்களை மென்டராக மாற்றும் பொறுப்பாக இருக்காது என சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரியான காசி விஸ்வநாதனுக்கு, வயதாகி வருவதால் அவருக்கு பதில் தோனி சிஎஸ்கே அணியின் சிஇஓ ஆக வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அவ்வாறு நடந்தால் கிரிக்கெட் வீரர் ஒரு அணியின் சிஇஓ ஆக மாறுவது என்பது இதுவே முதல் முறையாகும். தோனி சிஇஓ ஆக வந்தால் சிஎஸ்கே அணி முற்றிலும் அவருடைய கட்டுப்பாட்டிற்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவராக தோனி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, November 21, 2024, 20:41 [IST]
Other articles published on Nov 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+