Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவை இழுக்க சிஎஸ்கே திட்டம்? மும்பை அணியில் கேப்டன்சி, அதிக சம்பளம் கிடைக்காததால் விரக்தி!

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக மெகா ஏலத்திற்கு முன்பு எந்த வீரர்களை எந்த தொகைக்கு தக்க வைப்பது என்பதில் முடிவெடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி போராடி வருகிறது.

ஏனென்றால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதிலிருந்து அந்த அணிக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் மும்பை அணியில் ஏகப்பட்ட நட்சத்திர வீரர்கள் தற்போது இருக்கிறார்கள்.

ipl 2025 ipl retention cricket jasprit bumrah

இவர்களை தக்க வைக்க வேண்டுமென்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஏதேனும் இரண்டு ஸ்டார் வீரர்களுக்கு குறைவான சம்பளத்தை தான் கொடுக்க நேரிடும். மேலும் பும்ரா, சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் கேப்டன்சியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி உடையும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு அணியும் முதல் வீரர்களை பதினாறு கோடி ரூபாய் கொடுத்து தேர்வு செய்ய முடியும். இரண்டாவது வீரருக்கு 12 கோடி ரூபாயும், மூன்றாவது வீரருக்கு எட்டு கோடி ரூபாயும், நான்காவது வீரருக்கு 6 கோடி ரூபாயும் கொடுத்து தேர்வு செய்யலாம் என்ற விதி இருக்கின்றது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, சூரியகுமார், பும்ரா என்ற நான்கு வீரர்கள் ஸ்டார் அந்தஸ்தை பெற்றவர்கள்.

இதனால், இதில் குறைந்தது இரண்டு வீரர்களுக்கு 10 கோடிக்கு கீழ் சம்பளம் செல்லும். தற்போது இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா 12 கோடி ரூபாய் ஊதியம் வாங்குகிறார். இதனால் அதே ஊதியத்தை பும்ராவுக்கு வழங்கினால் தமக்கு கேப்டன்சி வேண்டும் என்று கூறுவார். இல்லை இந்த சம்பளம் போதாது என்று அவர் சொல்லிவிட்டு, வெளியேறி விடுவார்.

இதனால் பும்ரா ஏலத்தில் வந்தால், அவரை எப்படியாவது அணியில் சேர்த்துவிட வேண்டும் என சிஎஸ்கே அணி தீவிரம் காட்டி வருகிறது. சிஎஸ்கே அணியில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. இதனால் பும்ரா ஏலத்திற்கு வந்தால் அவரை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்று சிஎஸ்கே யோசித்து வருகிறது.

அதேசமயம் பும்ராவை வெளியே விட்டுவிடக்கூடாது என்ற மும்பை அணி ஆர் டி எம் கார்டை பயன்படுத்தி பும்ராவை வாங்கி விடலாம் என்ற யோசனையில் இருக்கின்றது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் பெரிய பிளவு நடைபெற வாய்ப்பு இருக்கின்றது.

Story first published: Sunday, August 25, 2024, 10:21 [IST]
Other articles published on Aug 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+