Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- சிஎஸ்கே அணிக்கு செம லக்.. முதல் போட்டிக்கு முன்பே தெறிக்கவிடும் 3 வீரர்கள்

சென்னை:ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சென்னை அணி தங்களுடைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு அணியிலும் பல திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தாலும், அவர்களுடைய பார்ம் என்பது மிகவும் முக்கியமாக இருக்கிறது. பார்மில் இருக்கும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடினால் ,அது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகும்.

IPL 2025 CSK

அந்த வகையில் சிஎஸ்கே அணியில் பல திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தாலும் மூன்று வீரர்கள் சூப்பர் பார்மில் இருப்பது அந்த அணிக்கு பலமாக கருதப்படுகிறது. அது யார் என்று தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்தரா. அண்மையில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்று பெருமையை பெற்றார்.

263 ரன்கள் இரண்டு சதங்களை அடித்திருந்த ரச்சின் ஸ்ட்ரைக் ரேட் 106 ஆகும். இதேபோன்று பந்துவீச்சிலும் ரச்சின் ரவீந்தரா விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணிக்கு அவர் மிகப்பெரிய பலமாக இருப்பார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ஜடேஜா. ஜடேஜா எப்போதெல்லாம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துகிறாரோ, அப்போதெல்லாம் சிஎஸ்கே அணி கோப்பையை கைப்பற்றும்.

இந்த சூழலில் ஜடேஜா தற்போது நல்ல பார்மில் இருக்கின்றார். பந்துவீச்சில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஒரு ஓவருக்கு நான்கு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருக்கிறார். இதனால் ஜடேஜாவின் பந்துவீச்சு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் அதிரடி ஆல்ரவுண்டர் சிவன் துபே.

கடந்த சீசன் சிவம் துபேக்கு பெரிய அளவு கை கொடுக்கவில்லை. ஆனால் இம்முறை சிவம் துபே நல்ல பார்மில் இருக்கின்றார். அது மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். அரையிறுதி ரஞ்சிப் போட்டியில் சிவம் துபே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதேபோன்று நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் சிவம் துபே 34 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார்.

மேலும் ஐந்தாவது டி20 போட்டியில் 13 பந்துகளில் 30 ரன்கள் இரண்டு முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார். இதனால் சிவம் துபே சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக இந்த சீசனில் இருப்பார்.

Story first published: Friday, March 14, 2025, 13:09 [IST]
Other articles published on Mar 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+