Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2025-சிஎஸ்கே அணியில் என் கவலை எல்லாம் இந்த ரூ.10 கோடி வீரரை பார்த்து தான்- பத்ரிநாத் கருத்து

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறாவது முறையாக கோப்பையை வெல்லுமா என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு காரணம் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான தோனி தன்னுடைய கடைசி ஐபிஎல் தொடரில் களமிறங்குகிறார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி எப்போதுமே சுழற் பந்துவீச்சாளரை நம்பி தான் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும். அந்த வகையில் இம்முறை சிஎஸ்கே அணியில் பிளேயிங் லெவனுக்குள் மூன்று சுழற்பந்துவீச்சாளர் கண்டிப்பாக இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Badrinath on csk

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத், "சிஎஸ்கே அணியை பொறுத்தவரை நூர் அஹ்மத் என்ற ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு வீரரை கண்டிப்பாக ஊற்று நோக்க வேண்டும். ஆனால் அவர் மீது எனக்கு சில கவலைகள் இருக்கின்றன. அவர் நல்ல லெக் ஸ்பின்னர் தான். அவர் சிஎஸ்கே அணிக்கு ஒரு X- Factor தான்" ( ரகசிய ஆயுதம்).

"ஆனால் 10 கோடி ரூபாய் என்ற தொகைக்கு ஏற்ற மாதிரி அவரால் விளையாட முடியுமா? அதில் எனக்கு மிகப்பெரிய கவலை இருக்கிறது. மேலும் சிஎஸ்கே அணிக்காக 14 போட்டிகளிலும் அவரால் விளையாட முடியுமா? சிஎஸ்கே அணிக்கு தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடியுமா? அதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அவர் அஸ்வினை விட கூடுதல் விலைக்கு சென்று இருக்கிறார்."

"என்னை பொறுத்தவரை சிஎஸ்கே அணி மூன்று சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் என நினைக்கின்றேன். இந்த தொடரில் இந்திய அணிக்கும் நான்கு பேர் கொண்ட சுழற் பந்துவீச்சாளர்கள் விளையாடினார்கள். எனவே சிஎஸ்கேவும் சுழற் பந்துவீச்சை நம்பி தான் ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்கும்."

"ஆனால் என்னுடைய கேள்வி எல்லாம் 10 கோடி ரூபாய் என்ற விலைக்கு ஏற்ப அவரால் விளையாட முடியுமா? மேலும் அணியில் நூர் அஹமதுக்கு வேண்டுமா என்ற கேள்வியும் என் மனதில் இருக்கிறது. ஏனென்றால் அவரிடம் பேட்டிங் பில்டிங் கிடையாது. வெறும் சுழற் பந்துவீச்சை மட்டும்தான் அவர் நம்பியிருக்கின்றார்.

வேண்டுமானால் சிஎஸ்கே அவரை இம்பேக்ட் வீரராக பயன்படுத்தலாம்" என்று பத்ரிநாத் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு சீசன்களாக நூர் அஹமது குஜராத் அணிக்காக விளையாடி இருக்கிறார். இதில் 23 போட்டிகளில் மொத்தமாக அவர் 24 விக்கெட்டுகளில் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 13, 2025, 20:39 [IST]
Other articles published on Mar 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+