Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs MI இன்று மோதல்..இரு அணிகளின் பிளேயிங் லெவன் என்ன? ஹர்திக்,பும்ரா இல்லாததால் MI-க்கு பின்னடைவு

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணி மோதும் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. ரசிகர்களால் எல்கிளாசிகோ என்று அழைக்கப்படும் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய இரண்டு முக்கிய தூண்கள் இல்லாமல் களமிறங்குகிறது.

இதன் காரணமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் விளையாடவில்லை. இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஆன பும்ரா காயம் காரணமாக விளையாடவில்லை.

CSK vs MI

இந்த நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை தாங்குகிறார். ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்டர் திறமைக்கு தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கார்பின் நல்ல மாற்றாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணியில் முஜிபுர் ரஹ்மான், சத்யநாராயண ராஜு போன்ற சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்கா வீரர் ரியான் ரெகுல்டன், மிட்செல் சாண்ட்னர், டிரெண்ட் போல்ட் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை போன்று நமன் தீர், ராபின் மின்ஸ் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். சிஎஸ்கே அணியை பொருத்தவரை சுழற் பந்துவீச்சாளர்களை நம்பி இன்று ஆட்டத்தில் களமிறங்குகிறது. சிஎஸ்கே அணியில் காண்வே, ரச்சின் ரவீந்தர மற்றும் ருதுராஜ் ஆகியோர் சிஎஸ்கே அணியின் பலமாக இருப்பார்கள்.

43 வயதான தோனி ஒரு ஆண்டுக்குப் பிறகு மீண்டும் களத்திற்கு திரும்புவதால் அவரைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அதேபோன்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணிக்கு அஸ்வின் திரும்பி இருக்கிறார். சிஎஸ்கே அணியில் ஜடேஜா, அஸ்வின் மற்றும் நூர் அகமது என்ற மூன்று சுழற் பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சில் பதிரானா, சாம் கரண், கலீல் அகமது ஆகியோர் இருக்கிறார்கள்.

மும்பை பிளேயிங் லெவன்: 1 ரோஹித் ஷர்மா, 2 ரியான் ரிக்கல்டன் (வாரம்), 3 திலக் வர்மா, 4 சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), 5 நமன் திர், 6 ராபின் மின்ஸ், 7 மிட்செல் சான்ட்னர், 8 கார்பின் போஷ்/முஜீப் உர் ரஹ்மான், 9 தீபக் சாஹர், 10 கரன்ட் ஷர்மா, 11 டிஏ சத்யநாராயணா குமார், 12, பவுல்ட்

சிஎஸ்கே அணி: 1 டெவோன் கான்வே/ரச்சின் ரவீந்திரா, 2 ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), 3 ராகுல் திரிபாதி, 4 தீபக் ஹூடா/விஜய் சங்கர், 5 சிவம் துபே, 6 சாம் கரண், 7 ரவீந்திர ஜடேஜா, 8.எம்எஸ் தோனி. 9 ஆர் அஷ்வின், 10 நூர் அஹ்மத், 11.பதிரனா 12. கலீல் அகமது/அன்ஷுல் கம்போஜ்

Story first published: Sunday, March 23, 2025, 7:00 [IST]
Other articles published on Mar 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+