Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பஞ்சாப் வாங்கிய மரண அடியை பார்த்தும் பேட்டிங் தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ்.. ஹர்திக் சொன்ன காரணம்?

முல்லான்பூர்: 2025 ஐபிஎல் தொடரின் பிளேஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டி இன்று (மே 30, 2025) நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதே முல்லான்பூர் மைதானத்தில் தான் நேற்று (மே 29, 2025) நடந்த முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்திருந்தது. அப்படி இருந்தும் மும்பை இந்தியன்ஸ் அணி அதே மைதானத்தில் டாஸ் வென்றவுடன் பேட்டிங்கை தேர்வு செய்து ஆச்சரியத்தை அளித்தது.

IPL 2025 Eliminator Match - Mumbai Indians vs Gujarat Titans Toss Report

இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம். நேற்று இருந்த பிட்ச்சை விட இது வேற மாதிரியாக இருக்கிறது. சற்று ஈரப்பதம் குறைவாக இருக்கிறது. இது பெரிய போட்டி என்பதால் அதிக ரன்கள் சேர்த்து விட்டு அதை தற்காத்து ஆடுவது நன்றாக இருக்கும்."

"நாங்கள் கடைசி 9 போட்டிகளையும் நாக்கவுட் போட்டிகள் போலத்தான் ஆடி இருக்கிறோம். எனவே இப்போது எப்படி ஆட வேண்டும் என்ற விழிப்புணர்வு எங்களிடம் உள்ளது. எங்கள் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜானி பேர்ஸ்டோ, ரிச்சர்ட் கிளீசன் ஆகியோர் விளையாடுகிறார்கள். ராஜ் அங்கத் பாவாவும் விளையாடுகிறார்" என்றார்.

அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசுகையில், "நாங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்ய விரும்பினோம். எங்கள் வீரர்கள் மீண்டும் சண்டிகரில் விளையாடுவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். இது எனது சொந்த ஊர். இந்தப் போட்டி எந்த வகையிலும் எங்களுக்கு வித்தியாசமாக இருக்காது."

"எங்களுக்கு நாக்கவுட் போட்டி என்று அழுத்தமோ எதுவும் இல்லை. எங்கள் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. ஜோஸ் பட்லருக்கு பதிலாக குசல் மெண்டிஸ் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அர்ஷத் கானுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்" என்றார்.

அணிகள்:

மும்பை இந்தியன்ஸ் (விளையாடும் லெவன்): ரோஹித் சர்மா, ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், ராஜ் பாவா, மிட்செல் சான்ட்னர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, ரிச்சர்ட் கிளீசன்

மும்பை இந்தியன்ஸ் இம்பாக்ட் சப்: கிருஷ்ணன் ஸ்ரீஜித், ரகு ஷர்மா, ராபின் மின்ஸ், அஸ்வினி குமார், ரீஸ் டாப்லி.

குஜராத் டைட்டன்ஸ் (விளையாடும் லெவன்): சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ஜெரால்ட் கோட்ஸி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

குஜராத் டைட்டன்ஸ் இம்பாக்ட் சப்: ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், அனுஜ் ராவத், மஹிபால் லோம்ரோர், ஜெயந்த் யாதவ், அர்ஷத் கான்.

Story first published: Friday, May 30, 2025, 19:13 [IST]
Other articles published on May 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+