IPL 2025: ஏமாற்றி தான் மும்பை வென்றது.. நடுவர்கள் தவறு செய்தார்கள்.. ரசிகர்கள் பரபர புகார்
மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி அணிகள் மோதிய ஆட்டம் ஒரு நாக் அவுட் போட்டி போல் தான் கருதப்பட்டது. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும் என்ற நிலை இருந்தது.
ஏற்கனவே குஜராத், rcb பஞ்சாப் ஆகிய அணிகள் பிளே ஆப்புக்கு தகுதி பெற்ற நிலையில் நான்காவது அணி மும்பையா இல்லை டெல்லியா என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 18வது ஓவர் முடிவில் வரை 132 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கடைசி இரண்டு ஓவரில் 48 ரன்களை விளாசினர்.

இதன் மூலம் 180 ரன்கள் என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி எட்டியது. இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணி மும்பை அணியின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 121 ரன்களில் ஆட்டம் இழந்தது. இந்த சூழ்நிலையில் மும்பை அணியின் இந்த வெற்றியை ரசிகர்கள் கடுமையாக சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகின்றனர்.
எக்ஸ் தளத்தில் அம்பையர் இந்தியன்ஸ் என்ற டேக்கை பயன்படுத்தி ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர். இதற்கு மூன்று காரணங்களை ரசிகர்கள் கூறுகின்றனர். அதில் நடுவர்கள் மூன்று முறை டெல்லிக்கு எதிராக தவறான முடிவை தெரிவித்து விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதில் டெல்லி அணியின் அதிரடி வீரர் விப்ராஜ் நிகம் 11 பந்தில் 20 ரன்கள் அடித்திருந்தார்.
மிட்செல் சாட்னர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இந்த சூழ்நிலையில் சாட்னர் வீசிய அந்த பந்து நோபால் என்று ரசிகர்கள் புகார் கூறியுள்ளனர். ஆனால் இதனை நடுவர் சரியாக பார்க்காமல் விட்டுவிட்டார் என்று கூறுகின்றனர். இதே போன்று விப்ராஜ் அடித்த பந்து ஒன்று சிக்ஸராக சென்றதாகவும், ஆனால் அதனை சரியாக பார்க்காத நடுவர் பௌண்டரி என்று கொடுத்து விட்டதாகவும், ரசிகர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதே போன்று டெல்லி அணியின் இளம் அதிரடி வீரர் அபிஷேக் போரெல், வில் ஜாக்ஸ் பந்துவீச்சில் சொதப்பினார். ஆனால் அபிஷேக் போரெல் கால் கிரீஸ்க்குள் தான் இருந்தது என்றும் இதனை நடுவர்கள் தவறாக அவுட் கொடுத்து விட்டார்கள் என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications