IPL 2025 Final: ஆர்சிபி கனவுக்கு குறுக்கே வந்த மழை.. ஐபிஎல் இறுதிப் போட்டியின் தலைவிதி என்ன?
அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. நான்காவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல்முறையாக கோப்பை வெல்லலாம் என கனவுடன் இருக்கும் நிலையில் அதற்கு குறுக்கே மழை வந்துள்ளது.
இந்த இறுதிப் போட்டியின் போது மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக வானிலை அறிக்கைகள் சுட்டிக்காட்டி உள்ளன. 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. இந்த இரண்டு அணிகளும் இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லாத நிலையில், எந்த அணி கோப்பை வென்று வரலாறு படைக்கப் போகிறது என்று ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் தான் மழை இந்த ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு குறுக்கே வந்து நின்று இருக்கிறது.

ஏற்கனவே இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டி நடைபெற்றபோது மழையால் போட்டி நீண்ட நேரம் தாமதமாகவே தொடங்கியது. அதேபோலவே இறுதிப்போட்டியின் போதும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கைகள் சுட்டிக்காட்டி உள்ளன.
தற்போதைய நிலவரத்தின்படி, இன்றைய நாளில் அகமதாபாத் நகரத்தில் 62 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதே சமயம், போட்டி நேரத்தின்போது மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால், இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியின் போதும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இரவு நேரத்தில் குறைவாக இருப்பதாகவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனால், போட்டியில் டாஸ் போடப்பட்டதற்குப் பிறகு சுமார் ஒன்றரை மணி நேரம் மழை பெய்தது. எனவே, வானிலை அறிக்கையை அப்படியே நம்ப முடியாது.
இந்த இறுதிப் போட்டி நாளில் 62% மழை பெய்யும் என்று கூறப்படும் நிலையில், போட்டி அதனால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனினும், முழுமையாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், போட்டி நேரத்திற்கு முன்பு மாலை 5 மணி முதல் 7 மணி வரை அதிகப்படியான மழை பெய்யும் என வானிலை முன்னறிவிப்பு செய்யும் இணையதளங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எனவே, போட்டி தாமதமாக துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications