For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“ஒரு ஸ்டேஜ்-க்கு மேல கடைசி இடத்துல இருக்குறதுக்கு கூச்சப்படனும்டா”.. CSK, MI-ஐ கலாய்க்கும் மீம்ஸ்

சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்து ஒன்பதாவது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு போட்டிகளில் ஐந்து தோல்விகளை சந்தித்து பத்தாவது இடத்தில் உள்ளது.

இதை வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு நகைச்சுவையான மீம்ஸ்களும் வெளியாகி உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம். எப்போதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு அல்லது மூன்று இடங்களில் இடம் பெற்று இருக்கும். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த ரசிகர்கள் அந்த அணியை கிண்டல் செய்து வருவார்கள்.

IPL 2025 Hilarious Memes Emerge as CSK and MI Struggle at the Bottom

ஆனால் இந்த முறை நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் ஆடிய 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் அந்த அணி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பார்த்து "ஒரு ஸ்டேஜ்க்கு மேல கடைசி இடத்தில் இருப்பதற்கு கூச்சப்படனும்டா" என 7ஜி ரெயின்போ காலனியில் ஹீரோவின் தந்தை திட்டும் காட்சியை வைத்து மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மாற்றி, மாற்றி கோப்பைகளை வென்று வந்தன. அந்த இரண்டு அணிகள் மட்டுமே மொத்தமாக 10 ஐபிஎல் கோப்பைகளை வென்று இருக்கின்றன. ஆனால், இந்த முறை அந்த இரண்டு அணிகளும் புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருப்பதால் மற்ற அணிகள் அதை பார்த்து மகிழ்ச்சி அடைவதாக ஒரு மீம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒருவர் "ரொம்ப நாள் ஆசை மேடம்" என்று சொல்வதாக மீம்ஸ் இடம் பெற்றுள்ளது.

IPL 2025 Hilarious Memes Emerge as CSK and MI Struggle at the Bottom

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சமீபத்தில் வரிசையாக நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்தது. நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்று மீண்டும் வந்து இருக்கிறது. ஆனால் இன்னும் அந்த அணி அதிக வெற்றிகளை பெற்றால் மட்டுமே புள்ளிப் பட்டியலில் வேகமாக முன்னேற முடியும். இந்த நிலையில் அந்த அணி அடுத்தடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் தற்போது மோசமாக விளையாடி வரும் நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அந்த இரண்டு போட்டிகளுக்காக ஆவலோடு காத்திருப்பதாகவும் ஒரு மீம்ஸ் வெளியிட்டுள்ளனர். ஸ்பைடர் மேன் பட வில்லன் ஸ்பைடர் மேனை பார்த்து "ஹலோ பீட்டர்" என்று ஆவலோடு சொல்வது போல மீம் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடி ஆட்டம் ஆடினார். 40 பந்துகளில் சதம் அடித்தார். 55 பந்துகளில் 141 ரன்கள் எடுத்தார். 14 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களை விளாசினார். அதை பார்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் "அவனுக்கு கேம் தெரியல பாஸ். எல்லா பாலும் 6, 4 அடிச்சிட்டு இருக்கான்" என சிஎஸ்கே-வின் ஆமை வேகத்தை கிண்டல் செய்வது போல ஒரு மீம் வெளியாகியுள்ளது.

Story first published: Sunday, April 13, 2025, 9:57 [IST]
Other articles published on Apr 13, 2025
English summary
IPL 2025: Hilarious Memes Emerge as CSK and MI Struggle at the Bottom
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+