Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: பும்ரா ஒரு தடுப்பூசி போன்றவர்.. ரன்கள் சென்றால், அவர் பாதுகாப்பார்.. முன்னாள் வீரர் பாராட்டு

மும்பை: ஐபிஎல் 2025ஆம் ஆண்ட தொடரில் குஜராத்துக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பும்ராவின் அபார பந்துவீச்சால், மும்பை இந்தியன்ஸ் (MI) அணி வெற்றி பெற்றது. இரு அணிகளும் சேர்ந்து 436 ரன்கள் குவிக்கப்பட்ட இந்தப் போட்டியில், பும்ரா, 4 ஓவர்களில் 1/27 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார்.

இதனை பாராட்டி பேசிய வருண ஆரோன், பும்ராவை ஒரு பந்து வீச்சு அணிக்கு தடுப்பூசி என்று விவரித்தார், இது குறித்து பேசிய அவர், "அவர் ஒரு மருந்து, ஒரு வாக்சின், இது ஒரு பந்து வீச்சு அணிக்கு ஏற்படும் எந்த நோயையும் குணப்படுத்தும். விக்கெட்டுகள் தேவையா? அவர் வந்து விக்கெட்டுகளை எடுக்கிறார்.

Jasprit Bumrah

ரன்களைத் தடுக்க வேண்டுமா? அவர் உங்களுக்கு ரன்களைத் தடுக்கிறார். என்ன ஒரு பந்து வீச்சாளர்!" என்று ஆரோன் கூறினார்.குஜராத் பேட்ஸ்மேன்கள் ஆக்ரோஷமாக விளையாடும்போது, பும்ராவின் அமைதியான அணுகுமுறை காண்போரை ஈர்த்தது. வாசிங்டன் சுந்தரின் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தி, அணியை மீண்டும் போட்டிக்கு கொண்டு வந்த பும்ராவின் நிதானத்தை ஆரோன் பாராட்டினார்.

"அவரது திறமை மீதான நம்பிக்கை அபாரமானது. உங்களிடம் ஒரு சர்வதேச பயிற்சியாளர், மஹேலா ஜெயவர்தனே, இருக்கிறார். அவரது பந்து வீச்சாளர்கள் திடீரென ரன்கள் வாரி வழங்கத் தொடங்கும்போது அவர் பதற்றமடைகிறார். ஆனால், பும்ரா திரும்பி, 'நிதானமாக இருங்கள், நான் வேலையை முடித்து தருகிறேன்' என்று சொல்கிறார்.

வந்து, ஓடி, ஒரு சிக்ஸர் அடிக்கப்பட்டாலும், அடுத்த பந்தில் விக்கெட்டை எடுக்கிறார்," என்று ஆரோன் கூறினார்.
பும்ராவின் அபார செயல்பட்டால், மும்பை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிஃபயர் 2-க்கு முன்னேறியது. தற்போது நடைபெறும் குவாலிபையர் 2 போட்டியில் பும்ராவின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

Story first published: Sunday, June 1, 2025, 18:54 [IST]
Other articles published on Jun 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+