Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: உங்க வேலையை பாருங்க! மும்பை பயிற்சியாளரை அவமானப்படுத்திய பும்ரா.. என்ன நடந்தது?

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் அணி, மும்பை அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் அபாரமாக விளையாடி வந்தது. ஒரு கட்டத்தில் குஜராத் அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மும்பை அணியின் நட்சத்திர வீரர் பும்ரா அபாரமாக பந்து வீசி முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆட்டம் தலைக்கீழ் மாற்றியது.

இதன் மூலம் மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழலில் 229 ரன்கள் என்ற இலக்கை துரத்தியபோது குஜராத் அணியின் வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சனும் அபாரமாக விளையாடி வந்தனர்.

Jasprit Bumrah

அப்போது மும்பை அணி கலக்கத்தில் இருந்தது. இதனால் வெற்றி பெற வேண்டும் என பல்வேறு வீரர்களும் பல்வேறு யோசனைகளில் ஈடுபட்டனர். அப்போது பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த பும்ராவிடம் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே, எதோ அறிவுரை கூற வந்தார்.

ஆனால் ஏற்கனவே செம டென்ஷனில் இருந்த பும்ரா, நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். போய் அமைதியாக உட்காருங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற சைகையில் கூறி ஜெயவர்த்தனேவை அவமதித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோன்று ஹர்திக் பாண்டியா பும்ராவிடம் ஏதோ ஒரு அட்வைஸ் கூற வந்த போதும் பும்ரா இதே போல் தான் சொன்னார்.

கையை காண்பித்து நான் பார்த்துக் கொள்கின்றேன் நீங்கள் போங்கள் என்பது போல் கூறினார். அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டனிடம் பும்ரா ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார். ஒருவேளை கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்பதால் பும்ரா இவ்வாறு கோபமாக நடந்து கொள்கிறாரா என்று அடுக்கடுக்கான கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

மேலும் பும்ரா செய்ததில் தவறு ஏதுமில்லை என்று கிரிக்கெட் ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். பும்ராவுக்கு இதுபோன்ற சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்றும் அப்போது பல்வேறு தரப்பினரும் பல அட்வைஸ்களில் வழங்கினால், அது பவுலர்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் தான் பும்ரா இவ்வாறு செய்ததாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Story first published: Saturday, May 31, 2025, 16:32 [IST]
Other articles published on May 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+