Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- சிஎஸ்கேக்கு வரப் போகும் பும்ராவை விட ஸ்பெஷலான வீரர்.. யார் தெரியுமா?

சென்னை : இந்திய கிரிக்கெட்டில் பல வீரர்கள் புயல் போல் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போய் இருக்கிறார்கள். அந்த வகையில் பும்ரா தற்போது இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளராக உள்ள நிலையில் அவரை விட மிகவும் ஸ்பெஷலான ஒரு வீரர் அண்டர் 19 கிரிக்கெட் மூலம் இந்திய அணிக்கு கிடைத்தார்.

2018 அண்டர் 19 உலக கோப்பையை இந்திய அணி வெற்றி பெற கமலேஷ் நாகர்கோட்டி என்ற வேகப் பந்துவீச்சாளர் மிகவும் முக்கிய காரணமாக அமைந்தார்.அந்தத் தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடி ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார். எக்கனாமிக் வெறும் மூன்று புள்ளி நான்கு எட்டு என்ற அளவில் இருந்தது.

ipl 2025 csk 2025

கமலேஷ் நாகர்கோட்டியின் வேகப்பந்து வீச்சை பார்த்து ஐசிசியே இந்தியாவின் வேகப்பந்துவீச்சு தோற்றம் மாறிவிட்டது என்று ஒரு வீடியோவை வெளியிட்டது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக கமலேஷ் நாகர்கோட்டி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் காயம் காரணமாக பெரிய அளவில் சோபிக்காமல் சென்று விட்டார். இந்த நிலையில் தற்போது கமலேஷ் நாகர்கோட்டி முழு உடல் தகுதியை எட்டி உள்ள நிலையில் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடிப்படை விலையான 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கமலேஷ் நாகர்கோட்டி , இந்த ஒரு வாய்ப்புக்காக தான் நான் பல ஆண்டுகள் காத்துக் கொண்டிருந்தேன். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததை நினைத்து நான் நன்றி உணர்வுடன் இருக்கின்றேன். நான் எந்த அணிக்கு திரும்ப வேண்டும் என்று நினைத்தேனோ, அதே அணியால் தற்போது ஏலத்தில் வாங்கப்பட்டிருக்கின்றேன்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவதை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கின்றேன்.

அந்த வாய்ப்பை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் தோனியுடன் விளையாட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. தோனியுடன் விளையாடும் வாய்ப்பு எனக்கு ஒரு நாள் கிடைக்கும் என்ற நான் கனவில் கூட நினைத்ததில்லை. தற்போது என்னுடைய உடல் தகுதியை நான் தற்காத்து வருகிறேன். உடல் தகுதிக்காக கடுமையாக உழைத்து வருகின்றேன்.தற்போது எனக்கு காயம் ஏற்படுவதில்லை.பல ஆண்டுகளாக எனக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் எந்த வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் மூலம் நான் மிகுந்த விரக்திக்கு ஆளானேன். எனக்கு கடும் கோபம் இருந்தது. மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தேன். ஆனால் என்னால் மீண்டும் கம்பேக் கொடுக்க முடியும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு இருந்தேன் என்று கமலேஷ் நாகர்கோட்டி தெரிவித்துள்ளார். 24 வயதான கமலேஷ் நாகர்கோட்டி சையது முஸ்தாக் அலி தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். இதில் 7 போட்டிகளில் விளையாடிய அவர் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னுடைய திறமையை நிரூபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, December 10, 2024, 18:29 [IST]
Other articles published on Dec 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+