Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எந்த அணியும் செய்யாத பிரம்மாண்ட ஐபிஎல் சாதனையை செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. மூன்று 20+ வெற்றிகள்

கொல்கத்தா: ஐபிஎல் வரலாற்றில் வேறு எந்த அணியும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி படைத்துள்ளது. மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளுக்கு எதிராக 20 அல்லது அதற்கும் அதிகமான வெற்றிகளைப் பெற்ற முதல் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உருவெடுத்துள்ளது.

நேற்று நடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 80 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தது. இது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தாவின் 20-வது வெற்றியாகும்.

IPL 2025 KKR Creates Unique IPL Record with 20 Wins Against Three Teams

இதற்கு முன்பு, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 21 வெற்றிகளையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 20 வெற்றிகளையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பதிவு செய்துள்ளது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் மூன்று வெவ்வேறு அணிகளுக்கு எதிராக 20 அல்லது அதற்கும் அதிகமான வெற்றிகளைப் பதிவு செய்த ஒரே அணி என்ற தனித்துவமான சாதனையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்ற அணிகளின் பட்டியலில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்று முறை இடம்பிடித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 21 வெற்றிகளுடன் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளது.முதலிடத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 24 வெற்றிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாமிடத்தில் பெங்களூருவுக்கு எதிராக 21 வெற்றிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் உள்ளன.

நான்காவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு எதிராக 20 வெற்றிகளுடன் மும்பை இந்தியன்ஸ் உள்ளது.ஐந்து மற்றும் ஆறாவது இடங்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடம் பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 20 வெற்றிகளுடன் ஐந்தாவது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 20 வெற்றிகளுடன் ஆறாவது இடத்திலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 200 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. 16.4 ஓவர்களில் 120 ரன்களுக்குள் சுருண்ட அந்த அணி, 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்கரவர்த்தி மற்றும் வைபவ் அரோரா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Story first published: Friday, April 4, 2025, 7:53 [IST]
Other articles published on Apr 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+