Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- KKR அணி ஏலத்தில் வாங்க போகும் வீரர்கள் யார்? ஸ்ரேயாஸ்க்கு பதில் புதிய கேப்டன் யார்?

கொல்கத்தா : சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் பிறகு அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணி என்று பெருமையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெற்றிருக்கிறது.2012, 2014 மற்றும் 2024 ஆண்டு சீசனில் மூன்று முறை கோப்பையை கே கே ஆர் அணி கைப்பற்றி இருக்கிறது.பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கே கே ஆர் அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கோப்பையை வாங்கி கொடுத்தார்.

பொதுவாக இப்படி சாதனை படைத்த கேப்டனை அனைத்து அணியுமே கோபுர உச்சியில் தான் வைத்திருக்கும்.ஆனால் கே கே ஆர் அணி யாரும் எதிர்பாராத வகையில் ஸ்ரேயாஸ் ஐயரை அதிரடியாக நீக்கி இருக்கிறது.அதுமட்டுமல்லாமல் கே கே ஆர் அணி ஏலத்திற்கு முன்பே அனுமதிக்கப்பட்ட அளவான ஆறு வீரர்களையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

ipl 2025 kkr shahrukh khan

முதல் வீரராக கே கே ஆர் அணியின் இளம் அதிரடி நட்சத்திர வீரர் ரிங்கு சிங்கை 13 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.இரண்டாவது வீரராக சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை 12 கோடி ரூபாய்க்கும், மூன்றாவது வீரராக ஆல்ரவுண்டர் சுழற் பந்துவீச்சாளரான சுனில் நரேனை 12 கோடி ரூபாய்க்கும் கே கே ஆர் அணி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

நான்காவது வீரராக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்டிரு ரஸிலை 12 கோடி ரூபாய்க்கும் ஐந்தாவது வீரராக வேக பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவை 4 கோடி ரூபாய்க்கும்,ஆறாவது வீரராக ஆல்ரவுண்டர் ரமண்தீப் சிங்கை நான்கு கோடி ரூபாய்க்கும் கேகே ஆர் அணி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.இதன் மூலம் 11 பேரில் ஆறு முக்கிய வீரர்களை KKR தக்க வைத்து விட்டது.

தற்போது கே கே ஆர் அணிக்கு தொடக்க வீரர் ஒருவரும் நடுவரிசை வீரர் ஒருவரும் வேகப்பந்து வீச்சாளர் இருவரும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒருவரும் தேவைப்படுவார்கள். அந்த வகையில் கேகேஆர் அணி ஏலத்தில் 51 கோடி ரூபாயை வைத்துக் கொண்டு வீரர்களை வாங்க வேண்டும். கே கே ஆர் அணிக்கு இருக்கும் முதல் தலைவலியே ஸ்ரேயாஸ் ஐயர் இடத்திற்கு கேப்டனாக யாரை கொண்டு வருவது என்பதுதான்.

கே கே ஆர் அணியிடம் தற்போது ஆர் டி எம் கார்டு இல்லை என்பதால் ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், மிட்செல் ஸ்டார்க் போன்ற வீரர்களை மீண்டும் ஏலத்தில் தேர்வு செய்ய முடியாது. கேகேஆர் அணி தற்போது ரிங்கு சிங்கை கேப்டனாக நியமிக்கப் போகின்றது. இதன் அடுத்தபடியாக கே கே ஆர் அணி ஏற்கனவே அந்த அணிக்காக விளையாடிய பில் சால்ட், ரஹ்மத்துல்லா குர்பாஸ் போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை ஏலம் மூலம் வாங்க முயற்சி செய்யும்.

இதேபோன்று தங்களது அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் ஐயரை மீண்டும் வாங்க கே கே ஆர் அணி முயற்சி செய்யும். ஆனால் அது நடக்காத பட்சத்தில் சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டரான குர்ணல் பாண்டியாவை தேர்வு செய்யலாம். நடுவரிசையில் வெளிநாட்டு பேட்ஸ்மேன் தேவை என்பதால் கே கே ஆர் அணி மேக்ஸ்வெல், லிவிங்ஸ்டோன், பாரிஸ்டோ போன்ற மூன்று வீரர்களையும் குறி வைக்கும்.

இதேபோன்று மிட்செல் ஸ்டார்க்குக்கு பதிலாக ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரை கே கே ஆர் அணி வாங்கும்.ஸ்டார்க் பதில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஷாம் கரண், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஜெரால்ட் கோயிட்சே அல்லது ஜோப்ரா ஆர்ச்சரை தேர்வு செய்ய கேகேஆர் அணி முயற்சி செய்யலாம்.

இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் சர்துல் தாக்கூர், புவனேஸ்வர் குமார், நடராஜன், முகமது சமி ஆகியோர்களில் ஏதேனும் ஒருவரை தேர்வு செய்ய முயற்சிக்கும். தங்களிடம் இருக்கும் 51 கோடியில் கே கே ஆர் அணி ஒரு வீரருக்காக அதிகபட்சம் 15 முதல் 20 கோடி வரை செலவு செய்து நாம் மேலே குறிப்பிட்ட வீரர்களை வாங்க முடியும்.

இதன் மூலம் Tim seifert அல்லது ரஹ்மத்துல்லா குர்பாஸ், சுனில் நரைன்,குர்ணல் பாண்டியா,ஆண்டிரூ ரஸில், லிவிங்ஸ்டோன் அல்லது பாரிஸ்டோ, ரமண்திப் சிங், வருண் சக்கரவர்த்தி,, ஹர்ஷித்ராணா, ஜோப்ரா ஆச்சர் நடராஜன் அல்லது புவனேஸ்வர் குமார் அல்லது ஷர்துல் தக்கூர் என்று பலமான அணி உருவாகிவிடும்.ஆறு முக்கிய வீரர்களை கேகேஆர் அணி தக்க வைத்திருப்பதால் அந்த அணிக்கு பிளஸ் பாயிண்டாக மாறிவிட்டது.

Story first published: Tuesday, November 12, 2024, 16:16 [IST]
Other articles published on Nov 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+