For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

க்ருனால் பாண்டியா வரலாற்று சாதனை.. ஐபிஎல் இறுதியில் இரண்டு முறை ஆட்ட நாயகன் விருது வென்ற முதல் வீரர்

அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட க்ருனால் பாண்டியா ஆட்டநாயகன் விருது வென்றார். இதன் மூலம் அவர் மாபெரும் வரலாற்றுச் சாதனையை செய்திருக்கிறார். ஐபிஎல் வரலாற்றிலேயே இரண்டு வெவ்வேறு இறுதிப் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற சாதனையை செய்திருக்கிறார் அவர். இதற்கு முன் வேறு எந்த வீரரும் இரண்டு முறை ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்றதில்லை.

நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீசியபோது, க்ருனால் பாண்டியா 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 190 ரன்கள் எடுத்த நிலையில், ஒரு ஓவருக்கு சுமார் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி சேசிங் செய்து வந்தது.

IPL 2025 Krunal Pandya Makes History with Second IPL Final Player of the Match Award

அப்போது க்ருனால் பாண்டியா மிகவும் கட்டுக்கோப்பாக வீசி பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அவரது சிறப்பான பந்துவீச்சின் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதற்கு முன் 2017 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் இடம் பெற்றிருந்தபோது, இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து அவர் வெளியேறி விட்டாலும், தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பிடித்து ஆட்டநாயகன் விருது வென்று இருக்கிறார்.

மேலும், அவர் நான்கு முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றும் அசத்தியிருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மூன்று முறையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஒரு முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறார் க்ருனால் பாண்டியா.

ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் (POTM) விருது வென்ற வீரர்கள்:

  • 2008 - யூசுப் பதான் (ராஜஸ்தான் ராயல்ஸ்)

  • 2009 - அனில் கும்ப்ளே (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

  • 2010 - சுரேஷ் ரெய்னா (சென்னை சூப்பர் கிங்ஸ்)

  • 2011 - முரளி விஜய் (சென்னை சூப்பர் கிங்ஸ்)

  • 2012- மன்விந்தர் பிஸ்லா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

  • 2013 - கீரான் பொலார்ட் (மும்பை இந்தியன்ஸ்)

  • 2014 - மனிஷ் பாண்டே (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

  • 2015 - ரோகித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்)

  • 2016 - பென் கட்டிங் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

  • 2017 - க்ருனால் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்)

  • 2018 - ஷேன் வாட்சன் (சென்னை சூப்பர் கிங்ஸ்)

  • 2019 - ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்)

  • 2020 - டிரென்ட் போல்ட் (மும்பை இந்தியன்ஸ்)

  • 2021 - ஃபாஃப் டு பிளெசிஸ் (சென்னை சூப்பர் கிங்ஸ்)

  • 2022 - ஹர்திக் பாண்டியா (குஜராத் டைட்டன்ஸ்)

  • 2023 - டெவான் கான்வே (சென்னை சூப்பர் கிங்ஸ்)

  • 2024 - மிட்செல் ஸ்டார்க் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

  • 2025 - க்ருனால் பாண்டியா (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

Story first published: Wednesday, June 4, 2025, 9:53 [IST]
Other articles published on Jun 4, 2025
English summary
IPL 2025: Krunal Pandya becomes the first player in IPL history to win Player of the Match in two different finals.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+