For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 2025 LIVE: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் மோதல்.. டாஸ் யாருக்கு?

கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரின் இரண்டாம் நாளான இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியும் நடைபெற உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி மதியம் 3.30 மணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் போட்டி இரவு 7.30 மணிக்கும் தொடங்கும்.

2025 ஐபிஎல் தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம் 65 நாட்கள் இந்த ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று உள்ளன. மார்ச் 22 முதல் மே 25 வரை 2025 ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.

IPL 2025  IPL                     2025

Mar 23, 2025, 2:36 pm IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி மதியம் 3.30 மணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் போட்டி இரவு 7.30 மணிக்கும் தொடங்கும்.

Mar 23, 2025, 2:36 pm IST

2025 ஐபிஎல் தொடரின் இரண்டாம் நாளான இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியும் நடைபெற உள்ளது.

Mar 22, 2025, 10:49 pm IST

ஆர்சிபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. விராட் கோலி 59 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் நின்றார்.

Mar 22, 2025, 10:43 pm IST

விராட் கோலி அரைசதம் அடித்தார். 3 விக்கெட்கள் இழந்தாலும் பெங்களூரு அணி வெற்றியை நெருங்கி உள்ளது.

Mar 22, 2025, 10:22 pm IST

விராட் கோலி கொல்கத்தா அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை கடந்தார். அரைசதத்தை நெருங்கினார்.

Mar 22, 2025, 10:21 pm IST

ஃபில் சால்ட் 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Mar 22, 2025, 10:21 pm IST

ஆர்சிபி அணி 11 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்துள்ளது.

Mar 22, 2025, 9:59 pm IST

ஆர்சிபி அணி சேசிங்கில் அபாரமாக ஆடி வருகிறது. 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 25, பிலிப் சால்ட் 48 ரன்கள் சேர்த்து ஆடி வருகின்றனர்.

Mar 22, 2025, 9:21 pm IST

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணிக்கு 175 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயம்.

Mar 22, 2025, 9:10 pm IST

அங்க்ரீஷ் ரகுவன்ஷி 22பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி 7 விக்கெட்களை இழந்தது. 19 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.

Mar 22, 2025, 8:55 pm IST

க்ருனால் பாண்டியா அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். சுயாஷ் சர்மா ஆண்ட்ரே ரஸ்ஸல் விக்கெட்டை சாய்த்தார்.

Mar 22, 2025, 8:55 pm IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது.

Mar 22, 2025, 8:45 pm IST

கொல்கத்தா அணியின் துணை கேப்டன் வெங்கடேஷ் ஐயர் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அந்த அணி 4 விக்கெட்களை இழந்தது.

Mar 22, 2025, 8:44 pm IST

கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் 109 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது.

Mar 22, 2025, 8:44 pm IST

கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே 31 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

Mar 22, 2025, 8:43 pm IST

சுனில் நரைன் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

Mar 22, 2025, 8:23 pm IST

அஜின்க்யா ரஹானே 25 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறார்.

Mar 22, 2025, 8:23 pm IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் குவித்தது.

Mar 22, 2025, 8:01 pm IST

3, 4 மற்றும் 5 வது ஓவர்களில் மட்டும் மொத்தம் 51 ரன்கள் சேர்க்கப்பட்டது. அஜின்க்யா ரஹானே மற்றும் சுனில் நரைன் அதிரடியாக ரன் குவித்தனர்.

Mar 22, 2025, 8:01 pm IST

முதல் 3 ஓவர்கள் நிதான ஆட்டம் ஆடிய கொல்கத்தா அணி அடுத்து அதிரடியாக ரன் குவித்து வருகிறது.

Mar 22, 2025, 7:40 pm IST

குவின்டன் டி காக் 5 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

Mar 22, 2025, 7:40 pm IST

ஜோஷ் ஹேசல்வுட் வீசிய முதல் ஓவரில் கொல்கத்தா அணி முதல் விக்கெட்டை இழந்தது.

Mar 22, 2025, 7:19 pm IST

ஆர்சிபி அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Mar 22, 2025, 7:02 pm IST

ஷாரூக் கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சில நிகழ்வுகள் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் இந்த தாமதம் ஏற்பட்டு உள்ளது.

Mar 22, 2025, 7:01 pm IST

7 மணிக்கு டாஸ் போடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், துவக்க விழா இன்னும் நடைபெற்று வருவதால் டாஸ் நிகழ்வில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

Mar 22, 2025, 6:58 pm IST

2025 ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி தொடங்கியது. மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக முன்பு கூறப்பட்ட நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவக்க விழா திட்டமிட்டபடி நடந்தது.

Story first published: Saturday, March 22, 2025, 18:56 [IST]
Other articles published on Mar 22, 2025
English summary
IPL 2025 [ஐபிஎல் 2025] LIVE News Updates in Tamil: Check Our IPL 2025 LIVE Blog in tamil and stay updated with real-time scores, match highlights, latest news, results, stats, and records. Follow all the action, drama, and exciting moments from IPL 2025, exclusively in Tamil at Oneindia Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+