Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: அனைத்து பாராட்டுக்களும் ஆவேஷ்க்கு தான் சேரனும்.. வேண்டும் என்றே கடைசியில் செய்தேன்- பண்ட்

ஜெய்ப்பூர்: பிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த லக்னோ அணி கடைசி ஓவரில் அபாரமாக பந்துவீசி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து ரிஷப் பண்டிடம் கேள்வி கேட்ட முரளி கார்த்திக், தற்போது நிம்மதியாக இருக்கிறீர்களா? சந்தோஷமா என்று கேட்டார்.

அதற்கு இரண்டும் தான் என்று பதில் அளித்து பேசிய ரிஷப் பண்ட், இது போன்ற போட்டிகள் ஒவ்வொரு வீரரின் கேரக்டரையும் கட்டமைக்கும். இது நிச்சயம் சிறந்த வெற்றி. நாங்கள் ஒரு அணியாக இணைந்து விளையாடி இருக்கின்றோம். இந்த போட்டியின் மூலம் கிடைத்த உத்வேகம் எங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

Avesh Khan

இது போன்ற போட்டிகள் ஒவ்வொரு அணியின் கேரக்டரையும் ஒரு வீரரின் கேரக்டரையும் கட்டமைக்கும். இது நிச்சயம் எங்கள் அணிக்கு ஒரு நல்ல விஷயம் தான். அடுத்த போட்டியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இனிவரும் போட்டிகளில் இன்னும் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதற்கு அனைத்து பாராட்டுக்களும் பௌலர்களையே சேரும். குறிப்பாக ஆவேஸ் கான் அபாரமாக பந்து வீசி எங்களுக்கு வெற்றியை தேடி தந்தார். கொஞ்சம் கூட பதற்றம் அடையாமல் சரியான நேரத்தில் அவர் செயல்பட்டார். அது கொஞ்சம் கூட சுலபம் கிடையாது. அதுவும் இதுபோன்ற போட்டியில் பின்தங்கி இருந்தபோது ஆவேஷ் கான் பந்து வீசிய விதம் நிச்சயம் பாராட்டத்தக்கது.

எங்களுடைய பேட்ஸ்மேன்களும் அபாரமாக விளையாடி ஒரு நல்ல இலக்கை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஆவேஸ் கானை பற்றி சொல்ல வேண்டும் என்றால் மூன்று ஓவர்கள் சிறப்பாக வீசினார். குறிப்பாக இறுதி ஓவர் அபாரமாக இருந்தது. கடைசி ஓவர் வீசும் போது ஆவேஸ் இடம், உன்னுடைய நேரத்தை நீ எடுத்துக் கொள். நாம் தீட்டிய திட்டத்தை தெளிவான மனநிலையுடன் செயல்படுத்து என்று கூறினேன்.

ஒரு கட்டத்திற்கு ஒரு பந்து என்று மனதில் வைத்து செயல்படு என்று சொன்னேன். போட்டியை கடைசி வரை கொண்டு சென்று விளையாட வேண்டும். பவுலர்கள் மற்றும் பில்டர்களை கேப்டனாகிய நான் நம்ப வேண்டும். நாங்கள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம். தற்போது வெற்றியை நாங்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்கின்றோம். எனினும் நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இன்னும் எந்தெந்த இடத்தில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து பேசுவோம் என்று ரிஷப் பன்ட் கூறியுள்ளார்.

Story first published: Saturday, April 19, 2025, 23:57 [IST]
Other articles published on Apr 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+