Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மணிக்கு 156 கிமீ. வேகத்தில் பந்துவீசும் மாயங் யாதவ்க்கு என்ன தான் ஆச்சு? ஜாகிர் கான் தந்த அப்டேட்

லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக களம் இறங்கி மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் வாய் அடைக்க வைத்தவர் தான் மாயங் யாதவ். வேகமாக பந்து வீசுவது மட்டுமல்லாமல் தன்னுடைய கட்டுக்கோப்பான பந்துவீச்சாலும் ஐபிஎல் தொடரில் மாயங் யாதவ் விக்கெட்டுகள் எடுத்தார்.

லக்னோ அணிக்காக வெறும் 4 போட்டிகளில் விளையாடி மொத்தமாக ஏழு விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். இதில் இரண்டு முறை மாயங் யாதவ், ஆட்ட நாயகன் விருதை பெற்றார். மாயங் யாதவால் இந்த அபார செயல்பாட்டால் உடனடியாக அவர் இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

ind vs eng rohit sharma rishabh pant mayank yadav

இதில் வங்கதேசத்துக்கு எதிராக மூன்று டி20 போட்டி கொண்ட தொடரில் கடந்த ஆண்டு விளையாடிய மாயங் யாதவ், மொத்தமாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த நிலையில் மாயங் யாதவ், இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக பும்ராவின் இடத்தை பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் மாயங் யாதவ்க்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறது. இந்த நிலையில் லக்னோ அணி 11 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்திற்கு முன்பே அவரை தக்க வைத்துக் கொண்டது. தற்போது லக்னோ அணியின் வழிகாட்டியாக ஜாகிர் கான் இணைந்து இருப்பதால், அவர் மீது தனி கவரம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் மாயங் யாதவ்க்கு என்னதான் ஆச்சு என்பது குறித்து ஜாகிர் கான் தற்போது அப்டேட் கொடுத்திருக்கிறார்.

இதில், "தற்போது காயம் அடைந்துள்ள
மாயங் யாதவ் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி பயிற்சி செய்து வருகிறார். தற்போது முழு உடல் தகுதியை எட்டும் முயற்சியில் அவர் இருக்கின்றார். நாங்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள நிர்வாகிகளோடு தொடர்பு கொண்டு அவர் எந்த அளவிற்கு மீண்டு வருகிறார் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்".

"மேலும் லக்னோ அணியின் சார்பாக நானும் மாயங் யாதவ் உடன் தொடர்ந்து பேசி வருகிறேன். இளம் வீரர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற விஷயத்தை நான் மிகவும் நம்புவேன். மாயங் யாதவ், லக்னோ அணிக்காக மட்டுமல்ல இந்திய கிரிக்கெட்டுக்கும் மிகவும் முக்கியமான ஒரு பவுலர்".

"மாயங் யாதவின் திறமை என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும். தற்போது இருக்கும் பெரிய சவாலை மாயங் யாதவை தொடர்ந்து அதிக போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும். இதற்காக நான் என்னுடைய நேரம் சக்தி அனைத்தையும் செலவிட்டு வருகின்றேன். மாயங் யாதவ் எந்த கள சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும். எந்த ஒரு காயமும் இல்லாமல் நீண்ட நாள் எப்படி விளையாட வைக்க வேண்டும் என்பது குறித்து நான் அவருக்கு பயிற்சி தந்து வருகின்றேன்".

"இதை நோக்கி தான் தற்போது நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம். ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மாயங் யாதவ், நிச்சயமாக விளையாடுவார். ஆனால் வெறும் 100% உடல் தகுதி இல்லாமல், 150 சதவீதம் உடல் தகுதியுடன் அவர் இருக்க வேண்டும். அதற்காக என்ன செய்ய வேண்டுமோ, அதை நாங்கள் கண்டிப்பாக செய்வோம்"என்று ஜாகிர் கான் கூறியுள்ளார்.கேப்டன் ரிஷப் பண்ட் குறித்து பேசி அவர் டெல்லி அணியின் கேப்டனாக செயல்படும்போது அவர் எப்போதும் போல் களத்தில் ஆக்ரோஷமாக இருப்பார் என நம்புவதாக கூறியுள்ளார். மேலும் பண்ட் அதிரடியாக விளையாடுவதை போல் லக்னோ அணியும் செயல்பட வேண்டும் என்றும் ஜாகிர் கான் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, February 5, 2025, 8:01 [IST]
Other articles published on Feb 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+