Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“சின்னப் பசங்க கூட என்ன சண்டை..” ஸ்கூல் பையன் ராகுலை வம்பிழுத்த பவர்ஸ்டார் கோலி.. தெறிக்கும் மீம்ஸ்

டெல்லி: டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டியில் கே எல் ராகுல், விராட் கோலியை வைத்தும் சில மீம்கள் வெளியாகி உள்ளன. 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் புள்ளிப் பட்டியலில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதை வைத்து பல்வேறு மீம்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

கடந்த 12ஆம் தேதி, மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்திலிருந்து இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், 27ஆம் தேதி, மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதை வைத்து, 'அம்பியாக' இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி இப்போது 'அந்நியனாக' மாறியிருப்பதாக ஒரு மீம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் 'அம்பயர்களை' வைத்து பெற்ற வெற்றி என்ற விமர்சனமும் பரவலாக உள்ளது.

IPL 2025 memes MI amp amp RCB Climb Points Table Hilarious Memes

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் வீரர் கே.எல். ராகுல் பொறுமையாக விளையாடினார். 39 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். கடந்த ஆண்டு முழுவதும் கே.எல். ராகுல் இதே போன்ற நிதானமான ஆட்டங்களை ஆடியது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த ஆண்டு இதற்கு முன் அதிரடியாக விளையாடி வந்த அவர், இப்போது மீண்டும் ஒருநாள் போட்டிகளைப் போல விளையாடி வருவதை வைத்து, 'நீ என்னப்பா மறுபடியும் ஒருநாள் மேட்ச் ஆட ஆரம்பிச்சுட்ட?' என அதிர்ச்சி அடைவது போன்ற ஒரு மீம் வெளியிடப்பட்டுள்ளது.

அதே போட்டியில் விராட் கோலி, கே.எல்.ராகுலுடன் மோதலில் ஈடுபட்டார். இருவரும் வாக்குவாதம் செய்தனர். அதை வைத்து, 'சின்ன பசங்க கூட ஏம்பா சண்டை போடுற?' என ஒருவர் கேட்பது போலவும், அங்கு 'பவர்ஸ்டார்' போல விராட் கோலி இருப்பது போலவும், பள்ளி மாணவர்களிடத்தில் கே.எல். ராகுல் நிற்பது போலவும் வைத்து, எப்போதும் யாருடனாவது வம்பில் ஈடுபட்டு வரும் அந்த 'சின்ன பசங்க' என்பது விராட் கோலி தான் என கேலி செய்வது போல ஒரு மீம் வெளியிடப்பட்டுள்ளது.

விராட் கோலி நேற்றைய போட்டியில் 47 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். இதற்கு, விராட் கோலி டெஸ்ட் போட்டி உடையில் பேட்டிங் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு, 'விராட் கோலி அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார்' என தலைப்பிட்டு, 'டெஸ்ட் போட்டியில் இது அதிரடி ஆட்டம், ஆனால் டி20 போட்டிக்கு இது நிதானமான ஆட்டம்' என கேலி செய்து மீம் வெளியிடப்பட்டுள்ளது.

IPL 2025 memes MI amp amp RCB Climb Points Table Hilarious Memes

புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பின்னுக்குத் தள்ளியுள்ளது. மேலும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இணையாக மும்பை இந்தியன்ஸ் அணியும் 12 புள்ளிகளுடன் உள்ளது. ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா 10 போட்டிகளில் விளையாடி முதல் மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளதாகவும், ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணி எட்டு போட்டிகள் மட்டுமே விளையாடி 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் ஒரு மீம் வெளியிடப்பட்டுள்ளது.

Story first published: Monday, April 28, 2025, 13:37 [IST]
Other articles published on Apr 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+