For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

CSK vs MI: "அந்த" நடிகையை பின் தொடரும் விக்னேஷ் புத்தூர்.. பழைய ட்விட்டர் கணக்கால் சிக்கல்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் ஸ்பின்னர் விக்னேஷ் புத்தூர் தனது அபாரமான பந்துவீச்சால் இந்திய கிரிக்கெட் உலகில் கவனத்தை ஈர்த்துள்ளார். ஆனால், தற்போது மற்றொரு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.

23 வயதான விக்னேஷ் புத்தூர் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர். மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனார். முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களான ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தினார். மொத்தம் 3 விக்கெட்களை சாய்த்தார்.

IPL 2025 MI Spinner Vignesh Puthur in Twitter Controversy After Impressive Performance Against CSK

இதை அடுத்து விக்னேஷ் புத்தூர் யார் என ரசிகர்கள் தேடினார்கள். சமூக வலைதளங்களில் அவர் அதிக அளவில் பதிவுகளை வெளியிடுவதில்லை. ட்விட்டரில் ஒரு கணக்கு வைத்திருப்பதாக தற்போது ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவரது 17-வது வயதில் அந்த ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டதாக தெரிகிறது. அந்த கணக்கின் முகப்பில் அவர் "17" என வயதை குறிப்பிட்டு இருக்கலாம்.

இதில் சர்ச்சை என்னவெனில், அவர் அந்த கணக்கில் பின்பற்றும் நபர்களின் பட்டியலில் வெளிநாட்டு ஆபாச நடிகை ஒருவரின் ட்விட்டர் கணக்கு உள்ளது. இதை விக்னேஷ் புத்தூர் தெரிந்து தான் செய்திருக்கிறாரா? அல்லது தெரியாமல் அந்த நடிகையை பின்பற்றி இருக்கிறாரா? என்பது தெரியவில்லை.

அவர் மேலும் சில ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்பட நடிகைகளையும், கிரிக்கெட் சார்ந்த சில கணக்குகளையும் பின்பற்றி இருக்கிறார். அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஒன்று. அதை பலரும் சுட்டிக்காட்டி அவரை கேலி செய்தும் வருகின்றனர். ஆர்சிபி ரசிகர் என அவரை முத்திரை குத்தியுள்ளனர்.

மேலும், ஆபாச நடிகையை பின்பற்றுவதை வைத்து கிண்டல் செய்தும் வருகின்றனர். இதுவரை அவர் தனது ட்விட்டர் கணக்கில் எந்த ஒரு பதிவையும் வெளியிடவில்லை. இது ஒரு தேவையற்ற சர்ச்சையாக இருந்தாலும், ரசிகர்கள் பலரும் விக்னேஷ் புத்தூர் யார் என்பதை தெரிந்து கொள்வதற்கு ஆர்வமாக இருந்ததால் அவரைப் பற்றி இணையத்தில் தேடினர். சிலர் சமூக வலைதளங்களில் அவரது கணக்கை தேடிய போது தான் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

விக்னேஷ் புத்தூர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் வீழ்த்திய மூன்று விக்கெட்டுகளால் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிக்கு அருகே வந்தது. ஆனாலும், மும்பை அணி அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

செய்தி சுருக்கம்:

  • மும்பை இந்தியன்ஸ் வீரர் விக்னேஷ் புத்தூர் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நிலையில், அவரது பழைய ட்விட்டர் கணக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  • விக்னேஷ் புத்தூர் தனது 17 வயதில் தொடங்கிய ட்விட்டர் கணக்கில் ஆபாச நடிகை ஒருவரை பின்தொடர்கிறார் என்பது ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.
  • அவர் ஆர்சிபி அணியையும் பின்தொடர்வதால் அவரை ஆர்சிபி ரசிகர் என்றும் சிலர் கேலி செய்து வருகின்றனர்.
  • விக்னேஷ் புத்தூர் இதுவரை தனது ட்விட்டர் கணக்கில் எந்த பதிவும் வெளியிடவில்லை.
  • சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் விக்னேஷ் புத்தூர் 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Story first published: Monday, March 24, 2025, 10:03 [IST]
Other articles published on Mar 24, 2025
English summary
IPL 2025: MI Spinner Vignesh Puthur in Twitter Controversy After Impressive Performance Against CSK
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+