Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: மும்பை இந்தியன்ஸ் மாபெரும் சரித்திர சாதனை.. ஐபிஎல் தொடரிலேயே 150 மைல்கல் வெற்றி

மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பாராத அளவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஐந்து போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி மற்றொரு ஐபிஎல் வரலாற்று சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

2025 ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் தான் விளையாடிய முதல் 5 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்தது. அங்கிருந்து தற்போது அதிரடியாக மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. முதல் ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ், தற்போது அடுத்த ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் பத்து போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

IPL 2025 Mumbai Indians Achieve Historic 150 IPL Wins in IPL 2025

மேலும், ஐபிஎல் வரலாற்றிலேயே 150 வெற்றிகளைப் பெற்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிதான் ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணியாக உள்ளது. மொத்தம் 271 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, 150 வெற்றிகளையும் 121 தோல்விகளையும் சந்தித்துள்ளது.

இந்த பட்டியலில் அதிக வெற்றி பெற்ற இரண்டாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. 248 போட்டிகளில் 140 வெற்றிகள் மற்றும் 106 தோல்விகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. இடையே இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை விட குறைவான போட்டிகளிலேயே விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஆனால் அதிகப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது. அந்த அணி 261 போட்டிகளில் 134 வெற்றிகளையும் 125 தோல்விகளையும் சந்தித்துள்ளது. இந்த மூன்று அணிகள் மட்டுமே இதுவரை மொத்தமாக ஐபிஎல் தொடரில் 13 கோப்பைகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற அணிகளில், புதிய அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மட்டுமே தோல்விகளை விட அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளன. தோல்விகளை விட அதிக வெற்றிகளைக் கொண்ட அணிகள் ஐந்து மட்டுமே உள்ளன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் வெற்றிகளை விட அதிக தோல்விகளை சந்தித்த அணிகளாக உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி மற்றும் தோல்விகளை சரிசமமாகப் பெற்ற அணியாக உள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகள் பட்டியல் -

  1. மும்பை இந்தியன்ஸ் - 271 போட்டிகள் - 150 வெற்றிகள் - 121 தோல்விகள் - (முடிவு இல்லாத போட்டிகள் - 0)

  2. சென்னை சூப்பர் கிங்ஸ் - 248 போட்டிகள் - 140 வெற்றிகள் - 106 தோல்விகள் - (முடிவு இல்லாத போட்டிகள் - 2)

  3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 261 போட்டிகள் - 134 வெற்றிகள் - 125 தோல்விகள் - (முடிவு இல்லாத போட்டிகள் - 2)

  4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 265 போட்டிகள் - 129 வெற்றிகள் - 132 தோல்விகள் - (முடிவு இல்லாத போட்டிகள் - 4)

  5. டெல்லி கேப்பிடல்ஸ் - 260 போட்டிகள் - 121 வெற்றிகள் - 137 தோல்விகள் - (முடிவு இல்லாத போட்டிகள் - 2)

  6. பஞ்சாப் கிங்ஸ் - 255 போட்டிகள் - 117 வெற்றிகள் - 137 தோல்விகள் - (முடிவு இல்லாத போட்டிகள் - 1)

  7. ராஜஸ்தான் ராயல்ஸ் - 231 போட்டிகள் - 114 வெற்றிகள் - 114 தோல்விகள் - (முடிவு இல்லாத போட்டிகள் - 3)

  8. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 191 போட்டிகள் - 91 வெற்றிகள் - 100 தோல்விகள் - (முடிவு இல்லாத போட்டிகள் - 0)

  9. குஜராத் டைட்டன்ஸ் - 53 போட்டிகள் - 34 வெற்றிகள் - 19 தோல்விகள் - (முடிவு இல்லாத போட்டிகள் - 0)

  10. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 54 போட்டிகள் - 29 வெற்றிகள் - 24 தோல்விகள் - (முடிவு இல்லாத போட்டிகள் - 1)

Story first published: Monday, April 28, 2025, 11:09 [IST]
Other articles published on Apr 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+