Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 -மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மீண்டும் மாற்றம்! புதிய கேப்டன் யார்? வெளியேறும் ஹர்திக்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் தங்களது கேப்டனை மாற்றப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பை அணிக்கு ஐந்து கோப்பையை ரோகித் சர்மா வென்று தந்த நிலையில் அவரை தேவையில்லாமல் நீக்கிவிட்டு குஜராத் அணியிலிருந்து வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது.

இது ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தியது. மேலும் பல்வேறு வீரர்களும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது.

ipl 2025

மும்பை ரசிகர்கள் முதலில் ஹர்திக் பாண்டியாவை வெறுத்த நிலையில், டி20 உலக கோப்பையில் அவர் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து மும்பை ரசிகர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு மரியாதையுடன் அணியை விட்டு வெளியே செல்ல ஹர்திக் பாண்டியா நினைக்கிறார்.

மேலும் ஹர்டிக் பாண்டியா மும்பை அணியில் இருக்கும்போது அவருக்கு போதிய ஆதரவு வீரர்களிடமிருந்து கிடைக்கவில்லை என தெரிகிறது. ஹர்திக் பாண்டியா ஆர்.சி.பி அணிக்கு செல்ல முடிவெடுத்திருக்கிறார். இந்த சூழலில் டி20 இந்திய அணியில் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவும் செயல்பட்டு இருக்கிறார். அவருடைய தலைமையில் இலங்கைக்கு எதிரான தொடரில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது.

இதனை அடுத்து சூரிய குமார் யாதவுக்கு புதிய கேப்டன் பொறுப்பை வழங்க மும்பை அணி நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. வரும் 2020 ஆம் ஆண்டு சீசன் 2 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இதுவரை சூரிய குமார் 150 போட்டிகளில் ஐபிஎல் தொடரில் விளையாடி 3,594 ரன்கள் அடித்திருக்கிறார்.

ipl 2025

இதில் இரண்டு சதம், 24 அரை சதம் அடங்கும். ஐபிஎல் 11 வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த சூரிய குமார் யாதவ், 2018 சீசனில் 500 ஆண்டுகளுக்கு மேலும், 2019 சீசனில் 424 ரன்களும், 2020 சீசனில் 480 ரன்களும், 2021 ஆம் ஆண்டு சீசனில் 317 ரன்களும், 2022 சீசனில் 303 ரன்களும்,2023 சீசனில் 605 ரன்களும், 2024 ஆம் ஆண்டு சீசனில் 345 ரன்களும் சூரியகுமார் யாதவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அடித்திருக்கிறார்.

Story first published: Sunday, August 11, 2024, 16:46 [IST]
Other articles published on Aug 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+