Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Points Table: மேலே ஏறி வரோம், ஒதுங்கி நில்லு..MI தான் கெத்து! எங்கே செல்லும் பாதை என CSK தவிப்பு

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் மும்பை அணி இடையிலான போட்டி முடிவடைந்த பிறகு புள்ளி பட்டியல் தலைக்கீழ் மாறி இருக்கிறது. எப்படி தளபதி விஜய் வாழ்க்கை ஒரு வட்டம் தான். ஜெயிக்கிறவன் தோற்பான், தோற்கிறவன் ஜெய்ப்பான் என்று சொல்வாரோ! அதேபோல் கீழே அடி பாதாளத்தில் இருந்த மும்பை அணி தற்போது 10 புள்ளிகளை பெற்று பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்து, ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்த நிலையில் ஹைதராபாத் அணி படுதோல்வியை தழுவியும் அதே பத்தாவது இடத்திற்கு செல்லாமல் ஒன்பதாவது இடத்திலேயே நீடிக்கிறது. இதனால் சிஎஸ்கே அணிக்கு சோகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் புள்ளி பட்டியல் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

IPL Points Table

குஜராத் அணி எட்டு போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றி, இரண்டு தோல்வி என 12 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது. குஜராத்தின் ரன் ரேட் 1.10 என்று அளவில் இருக்கிறது. டெல்லி அணியும் 12 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லியின் ரன் ரேட் 0.65 என்ற அளவில் இருக்கின்றது.

மும்பை அணி தற்போது ஒன்பது போட்டிகளில் விளையாடி 5 வெற்றி நான்கு தோல்விய என 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.மும்பை அணியின் ரன் ரேட் 0.67 என்ற அளவில் உள்ளது. நான்காவது இடத்தில் ஆர்சிபி இருக்கிறது. ஆர்சிபி 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றியும் மூன்று தோல்வி என 10 புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் இருக்கிறது.
ஆர்சிபி ரன் ரேட் 0.47 என்ற அளவில் இருக்கிறது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவை தவிர அதிக ரசிகர்களை பெற்றிருக்கும் மும்பை, ஆர் சி பி அணிகள் இன்னும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட முடியும்.பஞ்சாப் அணி 10 புள்ளிகள் உடன் 0.17 ரன் ரேட் உடன் ஐந்தாவது இடத்திலும், லக்னோ அணி 10 புள்ளிகள் உடன் மைனஸ் 0.05 என்ற ரன் ரேட் உடன் ஆறாவது இடத்திலும் உள்ளது. கொல்கத்தா அணி 6 புள்ளிகள் உடன் 0.21 என்ற ரன் ரேட் உடன் ஏழாம் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் சன்ரைசர்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் முறையே 8,9,10 ஆகிய இடத்தில் தலா 4 புள்ளிகளுடன் இருக்கிறது.

Story first published: Thursday, April 24, 2025, 0:23 [IST]
Other articles published on Apr 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+