Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை அணியில் பிளவு! வெளியேறும் ஸ்டார் வீரர்கள்.. தடுத்து நிறுத்த அம்பானி நம்பி இருக்கும் திட்டம்

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கு அனைத்து அணிகளும் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த தொடருக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில் பல வீரர்கள் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த மெகா ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் நான்கு முதல் ஐந்து வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் முதல் வீரரை பதினாறு கோடி ரூபாய்க்கும், இரண்டாவது வீரரை 12 கோடி ரூபாய்க்கும் தக்க வைக்கலாம்.

ipl 2025 ipl retention cricket jasprit bumrah

மூன்றாவது வீரரை 8 கோடி ரூபாய்க்கும், நான்காவது வீரரை 6 கோடி ரூபாய்க்கும் தக்க வைக்கலாம். இப்படிதான் கடந்த ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு ஏலம் நடைபெற்றது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த முறை பும்ரா வெறும் 12 கோடி ரூபாய் தான் சம்பளம் வாங்கிருந்தார். பல பவுலர்கள் அதிக சம்பளம் வாங்கி இருந்தனர்.

மேலும் பும்ரா தமக்கு கேப்டன் பதவி வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார். இதேபோன்று சூரியகுமார் யாதவ், தமக்கு கேப்டன் பதவி வேண்டும் என்றும் கேட்டு உள்ளார். இந்த சூழலில் ரோகித் சர்மாவை தக்க வைக்கலாமா இல்லை அவரை இரண்டாவது, மூன்றாவது வீரராக தக்க வைக்கலாமா என்று யோசனையில் மும்பை அணி இருக்கிறது.

அப்படி செய்தால் ரோஹித் சர்மாவின் சம்பளமும் குறையும். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஸ்டார் வீரர்கள் வெளியேற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் பும்ரா, சூரியகுமார் ரோகித் சர்மா போன்ற வீரர்களை சரி கட்ட வேண்டும் என்றால் மும்பை இந்தியன்ஸ் கையில் ஒரே ஒரு ஆயுதம் தான் இருக்கிறது.

அது ரைட் டு மேட்ச் கார்டு என்ற ஒரு வாய்ப்பு ஆகும். உதாரணத்திற்கு பும்ராவை சிஎஸ்கே அணி 18 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் தேர்வு செய்கிறது என்றால், பும்ரா ஏற்கனவே விளையாடிய மும்பை அணி அதே தொகை கொடுத்து நாங்கள் பும்ராவை எடுத்துக் கொள்கிறோம் என்று கூறலாம். இது தான் அந்த ரைட் டு மேட்ச் கார்டின் பவர்.

வரும் மெகா ஏலத்தில் இரண்டு அல்லது மூன்று மேட்ச் கார்டு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இதனை வைத்துக்கொண்டு அணியை விட்டு செல்ல விரும்பும் பும்ரா சூரியகுமார், ரோகித் சர்மா போன்ற வீரர்களை ரைட் டு மேட்ச் கார்ட் பயன்படுத்தி அணியில் தக்க வைக்க மும்பை இந்தியன்ஸ் அணி யோசித்து வருகிறது.

Story first published: Tuesday, August 27, 2024, 17:51 [IST]
Other articles published on Aug 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+