For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்ரேயாஸ் ஐயர் செய்த செயல்.. உறைந்து போன அம்பானி குடும்பம்.. ஒரே ஓவரில் 26 ரன்னை அடித்து வெற்றி

அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை பிளேஆஃப் சுற்றில் வீழ்த்தி வெளியேற்றியது. இந்தப் போட்டியில் 19வது ஓவரின் முதல் பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் செய்த சம்பவத்தை பார்த்து மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்கள் நீதா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி உறைந்து போனார்கள்.

அப்போதே போட்டி அவர்களின் கைகளில் இருந்து நழுவிப் போனதை உணர்ந்து அவர்கள் அதிர்ச்சியுடன் காணப்பட்டார்கள். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது.

IPL 2025 Mumbai Indians Owners lost hope as Shreyas Iyer Smashes Sixes in qualifier 2

அந்த அணியின் ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த நிலையில், ஜானி பேர்ஸ்டோ 38 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி இருவருமே தலா 44 ரன்கள் எடுத்தனர். கடைசி நேரத்தில் நமன் தீர் அதிரடியாக ஆடி 18 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.

அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி 204 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிக் கொண்டிருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் 9 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். பிரியன்ஷ் ஆர்யா 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு மூன்றாம் வரிசையில் இறங்கிய ஜோஸ் இங்கிலிஸ் அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.

கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடி வந்தார். நெஹால் வதேரா 29 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஷாங்க் சிங் ரன் அவுட் ஆனார். 17வது ஓவரில் ஐந்தாவது விக்கெட் போனதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி நம்பிக்கையுடன் இருந்தது.

அப்போது பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிக்கு 31 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது. 18வது ஓவரில் பும்ரா பந்துவீச்சில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. அடுத்து இரண்டு ஓவர்களில் 23 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் 19வது ஓவரின் முதல் பந்தில் அபாரமாக ஒரு சிக்ஸ் அடித்தார். அடுத்த அந்த ஓவரின் இரண்டாவது பந்தை அஸ்வனி குமார் நோபால் ஆக வீசினார். அடுத்து இரண்டாவது பந்து மீண்டும் வீசப்பட்டது. அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் கூடாரம் அதிர்ச்சியில் உறைந்தது.

குறிப்பாக அந்த அணியின் உரிமையாளர்கள் ஆகாஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஏமாற்றத்துடனும் அதிர்ச்சியுடன் இருந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து போட்டி இத்துடன் முடிந்ததாக தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

அந்த ஓவரில் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடினார். மொத்தம் நான்கு சிக்ஸர்கள் அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 26 ரன்கள் எடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி இலக்கையும் எட்டியது. ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Story first published: Monday, June 2, 2025, 10:18 [IST]
Other articles published on Jun 2, 2025
English summary
IPL 2025: Mumbai Indians Owners' lost hope as Shreyas Iyer Smashes Sixes in qualifier 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+